பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா = முற்கால உரை: நன்மை செய்தவர் கொன்றாற் போலும் தீமை செய்யினும், நன்மை ஒன்றை நினைக்கத் தீமையெல்லாம் கெடும். தற்கால உரை: - தனக்கு உதவியவர் பின்பு கொலைக்கு ஒத்த தீமையைச் செய்தாலும், அந்த உதவியை நினைத்துப் பார்த்தால், அத்தீமையின் துன்பம் நீங்கிவிடும். புதிய உரை: மனச்சிதைவு போன்ற துன்பங்கள் பிறரால் நேர்கிற போதும், பண்பாளர்களின் பேராண்மை மிக்க உதவும் செயல் உண்மையாகப் பொருந்தி அவருக்கு நேர்ந்த கெடுதிகளை அழித்து விடும். விளக்கம்: உண்மையான உதவும் பண்பாளர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் துன்புறுவோர்க்கு உதவும், துயர்துடைக்கும்: சுகம் படைக்கும். கொன்று போடும் செயலைவிட ஒருவருக்கு மனச்சிதைவை உண்டாக்குவது மாபெரும் பாவம் ஆகும். அப்படிப்பட்ட கொடுமையையும் அன்பானவர்கள் செய்கைகள் அழித்து விடும் ஆற்றல் மிக்கவையாகும். 110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு பொருள் விளக்கம் எந்நன்றி = எந்த ஒழுக்கத்தை கொன்றார்க்கும் = அழித்தவர்க்கும் உய்வுண்டு = வாழ்வு உண்டு செய்நன்றி = மனம் உடல் சார்ந்த அகப்புற பண்பாட்டு ஒழுக்கத்தை; கொன்ற சிதைத்து விடுகிற; மகற்கு = மக்களுக்கு உய்வில்லை= (வாழ்வு, பிழைப்பு, ஈடேற்றம்)எதுவுமே இல்லை. சொல்விளக்கம்: நன்றி = ஒழுக்கம், நன்மை; கொன்றார் = சிதைத்தார், அழித்தார் உய்வு = வாழ்வு, பிழைப்பு, ஈடேற்றம் செய்கை = பண்படுத்துதல்.