பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 155 முற்கால உரை: எவ்வகை தருமங்களை அழித்தவர்களுக்கும் ஈடேற்றும் வழி உண்டாம். செய்நன்றியைக் கெடுத்தவர்களுக்கு ஈடேறும் வழியேயில்லை. தற்கால உரை செய்ந்நன்றி மறந்து வாழ்பவனுக்கு எப்பொழுதும் நல்வாழ்வு இருக்காது. புதிய உரை: வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தை அழித்தார்க்கும் வாழ்வு கிடைக்கும். ஆனால், உடல் மற்றும் அகப்புற பண்பாட்டு ஒழுக்கத்தைச் சிதைத்தவர்களுக்கு ஈடேற்றமும் இல்லை. வாழ்வும் இல்லை. பிழைப்பும் இல்லை. விளக்கம்: ஒழுக்கம் என்பது தினமும் விடாது செயல்பட்டு வருகிற செயல்கள். அவை உடலுக்கு நன்மைகள் செய்தால் அவை நல்வினை. கெடுத்தால் அவை தீவினை. தீவினைகளால் தேகம் தீய்ந்து போகும். மனம் மாய்ந்து போகும். அதனால் வள்ளுவர் பத்தாவது குறளில், செய்ந்நன்றி என்றார். செய்கை ஒழுக்கம். அது பண்பட்ட ஒழுக்கம். பண்பட்ட ஒழுக்கம் மண்பட்டால் வாழ்வே பழுதுபட்டு விடும். இழுக்காகிவிடும். அதனால் தான் இந்த அதிகாரத்தைச் செய்ந்நன்றி அறிதல் என்றார். செயல் ஒழுக்கங்கள் மக்களிடையே பல்கிப் பெருக வேண்டும் என்னும் பேரவாவில் பல கருத்துக்களைப் பகமரத்தாணி போல இந்த அதிகாரத்தில் பதிய வைத்திருக்கிறார்.