பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I58 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 112. செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து பொருள் விளக்கம்: செப்பம் உடையவன் - நடுநிலை உள்ள நேர்மையாளனின் ஆக்கம் = எழுச்சி மிக்க வாழ்வும் (வாழ்வாகிய செல்வமும்) சிதைவின்றி = எந்தவிதமான குறைவும் சீர்கேடும் இன்றி எச்சத்திற்கு - அவனாற்றும் உண்மையான காரியத்திற்கு ஏமாப்பு உடைத்து = வலிமையான காவலாக இருந்து மிகக் களிப்பை உண்டாக்கும் சொல் விளக்கம்: ஆக்கம் = வாழ்வு, எழுச்சி, செல்வம்; செப்பம் = நேர்மை எச்சம் = உண்மை, காரியம், மகன்; ஏமாப்பு = காவல், களிப்பு, வலியான முற்கால உரை: நடுவுநிலைமையுடையவன் செல்வமானது அவன் சந்ததிக்கு உறுதியுடைத்து என்பதாம். தற்கால உரை: நடுவுநிலைமை உடையவனது செல்வமானது, அழியாது அவனுக்கும் அவன் தலைமுறையினருக்கும் பயன்படுவதாக இருக்கும். புதிய உரை: நடுநிலையாளரின் எழுச்சி மிக்க நேர்மையான வாழ்வு, எந்தவிதக் குறைவுமின்றி அவரின் உண்மையான காரியங்களுக்கு வலிமையாக இருந்து மிகக் களிப்பை உண்டாக்கிக் காத்து நிற்கும். விளக்கம்: மனம் நடுவுநிலைக்கு வந்த பிறகு, ஒருவரது சொல்லும் செயலும் நேர்மையும் தூய்மையும் பெறுகிறது. அது வாய்மையும் தூய்மையும் வல்லமையை வழங்கிட உணர்ச்சிகள் எல்லாம் பேரெழுச்சி கொள்ள, வாழ் வெல்லாம் அதன் வழியெல்லாம் களிப்பும் துள்ள, செழிப்படைகிறது. அந்தச் செழிப்பே அவர் வாழ்வின் சிறப்பாகி, காலம் எல்லாம் துணைதந்து காக்கிறது என்று நடுவுநிலைமை கொள்கிறவர் பெறுகிற பாதுகாப்பான வாழ்வை 2வது குறளில் கூறுகிறார்.