பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை I59 113. நன்றே தரினும் நடுவிகந்தா மாக்கத்தை அன்றே ஒழிய விடல் பொருள் விளக்கம்: நன்றே தரினும் = சொர்க்கம் போன்ற இன்ப வாழ்வைத் தந்தாலும் நடுவிகந்தாம் - நடுவு நிலை பிறழ்ந்து பெறுகிற ஆக்கத்தை = எழுச்சியும் செல்வமும் மிகுந்த வாழ்வை ஒழிய விடல் = தருகிற நினைவை அப்பொழுதே அழித்து விட வேண்டும். சொல் விளக்கம்: நன்று = சுகம், நன்மை, வாழ்வு, இன்பம், சொர்க்கம் இகந்து = விதியைக் கடத்தல், பிறழுதல் ஒழி = முடித்து விடுதல், அழித்தல் முற்கால உரை: நடுவு நிலைமை இல்லாது வரும் செல்வம் நன்மையைத் தரினும் அப்பொழுதே விடக்கடவன். தற்கால உரை: நடுவு நிலைமை தவறிவரும் செல்வத்தைக் கொள்ளற்க. புதிய உரை: நடுவுநிலைமை விட்டுப் பிறழ்கிறபோது சொர்க்கம் போன்ற பேரின்ப வாழ்வு கிடைக்கப் பெறுமானால், அப்படிப்பட்ட வாழ்வைத் தரக்கூடிய நினைவை, அப்பொழுதே மனத்திலிருந்து அகற்றி விட வேண்டும். விளக்கம்: ஆக்கம் என்பதற்குச் செல்வம் என்றே எல்லா உரையாசிரியர்களும் பொருள் கொண்டிருக்கின்றனர். நான் வாழ்வு என்று பொருள் கொண்டிருக்கிறேன். செல்வமா வாழ்வா என்கிறபோது, வாழ்வுதான் முதன்மையானது. செம்மையான வாழ்வுக்குத்தான் மகிமையே தவிர, செல்வத்திற்கு அல்ல. எவருக்கும் செல்வம் கிடைக்கும். ஆனால், செல்வம் உள்ளவர்களுக்கு எல்லாம், நல்ல வாழ்வு கிடைக்காது. ஆகவேதான், பேரின்பம் தரும் வாழ்வு பரிசாகக் கிடைக்கும் என்றாலும், நடுநிலை மாறுகிற நினைவை உடனே அழித்துத் தூர்த்துவிட வேண்டும். செயலுக்கு நினைவுதான் முதல் என்பதால், வள்ளுவர் 3 ஆம் குறளில் நடுநிலை உணர்வைக் கடுமையாகப் பின்பற்றுமாறு கூறுகிறார்.