பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை I61 4 வது குறளில் நடுநிலைப் பண்பை சொல் மூலமும் செயல் மூலமும் செய்து காட்டி, மேன்மை பெற வேண்டும் என்று கூறுகிறார். 115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்து கோடாமை சான்றோர்க்கு அணி பொருள் விளக்கம்: கேடும் = வறுமை, இழுக்கு அல்லது மரணமோ பெருக்கமும் பெரும்பேறான, வளர்ச்சி தரும், திரண்ட செல்வமோ இல் லல்ல = (நடுநிலையுடன் நடக்கும் போது எது வேண்டு மானாலும் நடக்கும்). கிடைக்கும் நெஞ்சத்து - (ஆதலால்) நினைவில் (கூட) கோடாமை = ஒருதலையாக ஒரு பக்கத்தில் நில்லாமை ( சாய்ந்து விடாது) சான்றோர்க்கு அணி = நடுநிலை சான்றோர்க்கு பெருமை யளிப்பதாகும். சொல் விளக்கம்: கேடு = வறுமை, இழுக்கு, மரணம், குறைவு பெருக்கம் = வளர்ச்சி, பெரும்பேறு, திரண்டதனம் இல்லல் = நடத்தல், நடக்கை. கோடாமை = ஒருதலைக்கண் நில்லாமை முற்கால உரை: பெரியோர்க்கு நடுவு நிலைமையே அழகாம். தற்கால உரை: வறுமையும் வளமையும் மாறி மாறி வரும் இயல்புடையது. ஆதலால், அவை பற்றி நடுவு நிலைமை தவறுதல் ஆகாது. புதிய உரை: நடுவுநிலை வகிக்கிறபோது கேடு வரலாம். இழுக்கு சேரலாம். மரணமும் நேரலாம். செல்வமும் கிடைக்கலாம். என்றாலும் நடுவு நிலையாளர் தம் நினைவில் கூட ஒரு பக்கமாக சேர்ந்திடக்கூடாது. அதுவே அவருக்குப் பெருமை சேர்க்கும். விளக்கம்: இரண்டாகப் பிரிந்த மக்கள் பிரிவுகளுக்குள்ளே, நடுவுநிலைமையில் இருக்கிறபோது, எது வேண்டுமானாலும்