பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை I63 விளக்கம்: ஒருவர் அழிவுக்குச் செயல் காரணமாக இருக்கலாம். ஆனால், அந்த மாறுபட்ட நினைவே, ஒருவரை தாழ்த்திவிடும், வீழ்த்தி, பாழ்படுத்தி விடும் என்கிறார் வள்ளுவர். நல்ல நினைவுகள் வாழ்வைக் கொடுக்கும். தீய நினைவுகள் வாழ்வைக் கெடுக்கும். நல்ல உடல் - நல்ல மனம் - நல்ல வாழ்வு என்பது தான் உயர்ந்தோர் வாழ்க்கைமுறை. நடுவுநிலைமை என்கிற செந்தண்மையைச் சீரழிக்கிற ஒரு சிறு நினைவு. தீப்பொறியாக மாறி, தீப்புயலாக எரிக்கும் ஆற்றல் கொண்டதால், அந்த நினைவு வந்தோரின் உடல் வடிவு அழியும். எழில் உருவு அழியும். அவர் குணம் கழியும். பொருள் அழியும். தொடரும் வினை அழியும். ஆகவே, சிந்தை கெடாமல் வாழ வேண்டும். செயல்களை ஆற்ற வேண்டும். மனம்தான் உடலைக் காக்கிறது. உடல்தான் மனத்தைக் காக்கிறது. ஆகவே, மனம் மாறுகிறபோது உடல்நிலையும். உயிர் நிலையும்.-வாழ்வு நிலையும் மாறி அழிந்து போகிறது என்ற உளவியல் கருத்தை, வள்ளுவர் தனது 6 வது குறளில் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறுகின்றார். நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும் என்னும் பழமொழியை, இங்கேயும் எண்ணிப் பார்ப்போமாக! மாறிய நடுவுநிலை ஒழுக்கத்திற்கு வருகிற தீமையை இக்குறளில் வள்ளுவர் தெளிவு படுத்துகிறார். 117.கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு பொருள் விளக்கம்: நடுவாக = நடுவுநிலைமை எனும் உச்சநிலையான நன்றிக்கண் = ஒழுக்கத்தின்பாற் உறுதி கொண்டு தங்கியான் = அதன்படியே ஒழுகும் சான்றாளன் தாழ்வு = பெறுகிற அவமானம், தாழ்ச்சி, வறுமை போன்ற வற்றை உலகம் = உயர்ந்தோராகிய சான்றோர்கள் எல்லாம். கெடுவாக வையாது - அவரது இழப்பை பெரிதாக எண்ண மாட்டார்கள். மாறாக வாழ்த்திப் பெருமை சேர்ப்பார்கள்.