பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா போன்றவை; இன்மைபெறின் இல்லாமல் நடுநிலையுடன் சொற்கோட்டம் = கட்டளையிடுகிற இல்லது = ஒரு மந்திரி போல செப்பம் = செவ்விய வழியில் நடுநீதியை செய்திட வேண்டும் சொல் விளக்கம்: இல்லது = மந்திரி, பஞ்சபூதம், மாதா கோட்டம் = பொறாமை, அழுக்காறு, கோயில், நடுநிலை செப்பம் = செவ்விய வழி, நடுநீதி, தகுதி, செப்பனிடல் சொல் = கட்டளை, உறுதிமொழி முற்கால உரை: மனக்கோணலும், சொற் கோணலும் இல்லாமையே நடுவுநிலையாம். தற்கால உரை: நினைப்பும் சொல்லும் ஒத்து நேர்மையாக ஒழுகுதல் வேண்டும். புதிய உரை: நடுநிலையாளர், தன் மனத்திலே ஒருவித அழுக்காறு பொறாமை எதுவும் கொள்ளாது, மதிநுட்பம் வாய்ந்த மந்திரியைப் போல, உறுதியாக நடுநிலையுடன் கட்டளையிட்டு நீதி வழங்க வேண்டும். 8 வது குறளில் கோல் என்பதற்குச் செங்கோல், அரச நெறி முறையான சமன் என்றும் , மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் என்பதற்கேற்ப, அரசாட்சி நெறி முறைக்கு அமைச்சரின் ஆன்ற அறிவு வேண்டும் என்பதால், இல்லது செப்பம் என்றார். மந்திரிக்குரிய தகுதி மதி நுட்பம். ஆகவேதான் சொல் கோட்டம் என்பது உறுதியான கட்டளை என்று உணர்கிறோம். அரசன் கோலுக்கு ஆன்ற அறிவாளர் அமைச்சர் ஆவதால், அமைச்சரின் மதி நுட்பமும் செப்பமும் போன்றதை நடுவுநிலைமைக்குக் கைக்கொள்ள வேண்டும். மன உறுதியைக் கறையிலாச் சொல் கட்டளை என்று 9ஆம் குறளில் கூறியிருக்கிறார்.