பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை I67 120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின் பொருள் விளக்கம்: வாணி = சொல்லும் கம் = அறிவும் செயலும் இவற்றுடன் நடுவுநிலையை செய்வார்க்கு = செய்யும் முறையுடன் செய்பவர்கள் வாணிகம் பேணி - தனி அறிவாற்றல் மிகுந்த செயலைக் காத்து பிறவும் - அவர்களுக்கான (இந்தப்) பிறவியும் தமபோற் செயின் = தம்முடைய பிறவிபோல சிறந்ததுதான் என்றே நிறைவாக எண்ணிச் செயல்பட வேண்டும். சொல் விளக்கம்: (வாணிகம்) வாணி = சொல்; கம் = அறிவு, செயல் பிறவு = பிறவி, தம = நிரம்ப, தம்முடைய முற்கால உரை: பிறர் பொருளையும் தம் பொருளைப் போல் வியாபாரம் செய்தல் நல்ல வியாபாரம் என்பதாம். தற்கால உரை: வாணிகம் செய்வார் தம் பொருளுக்கு என்ன பெற விரும்புவாரோ அவற்றைப் பிறர் பொருளுக்கும் கொடுத்தல் வேண்டும். புதிய உரை: நடுவு நிலைமையாளர் தான் கட்டளையிட்டுக் கூறுகிற அறிவான சொல்லால் பிறரது பிறவியும் தம் பிறவிபோல் மிக உயர்ந்தது என்று எண்ணியே செயல்படுதல் வேண்டும். விளக்கம்: - வாணிகம் என்றால் எல்லோரும் வியாபாரம் என்றே பொருள் கொண்டிருக்கின்றனர். பிறவும் என்றால். பிறர் பொருள் என்றனர். நான் பிறவு என்றால் பிறவி, வாணி என்றால் சொல்லும் கட்டளை, கம் என்றால் அறிவு, செயல் என்றும் பொருள் கொண்டிருக்கிறேன். பிறர் பொருளைத் தம் பொருள் போலப் பார்ப்பது என்பதை விடப் பிறர் வாழ்கின்ற இந்தப் பிறவி என்னும் பேற்றை மதித்து, தம் பிறவி போலவே மற்றவரது வாழ்க்கைப் பிறப்பையும் மதித்து அறிவாற்றலுடன் செயல்பட வேண்டும் என்று வள்ளுவர் நடுவுநிலைமையாளர் மற்றவர் வாழ்க்கையை ஒரு வரம் என்று பாவித்து நீதி வழங்க வேண்டும் என்று பத்தாவது குறளில் முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.