பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 13. அடக்கம் உடைமை ஐம்புலன்களால் பெறுகின்ற அறிவிலும், விரிகின்ற அறிவின் தெரிவிலும் தெரிகின்ற அறிவின் தெளிவிலும் தேர்ந்து நிற்கிறபோதுதான். யாரையும் சார்ந்திடாமல் நடுவுநிலைமை எனும் நற்பணியைச் செப்பமுறச் செய்ய முடியும். இப்படிச் செய்வதற்கு, திட்பமான மனத்திண்மையும், நுட்பமான செயல்வன்மையும் வேண்டும் என்று விழைகிறார் வள்ளுவர். அதனால்தான், நடுவுநிலைமை அதிகாரத்தைத் தொடர்ந்து, மனத்துக்குரிய அடக்கப் பண்பைக் கூறுகிற அடக்கம் உடைமை என்ற அதிகாரத்தை வைத்திருக்கின்றார். அடக்கம் எனும் சொல்லுக்கு இச்சை அடக்கம், ஐம்புலன் அடக்கம், உயிர் ஒடுங்கி இருத்தல் என்று மனக்கட்டுப்பாட்டை விளக்குகின்ற அர்த்தமே கிடைக்கிறது. பள்ளத்தை நோக்கியே வெள்ளம் பாயும். அதுபோலவே, கள்ளத்தை நோக்கியே உள்ளம் தோயும் என்பது தேவவாக்கு. மனதுற்றவன் மனிதன். சிந்திக்கின்ற தாகமும் வேகமும் யூகமும் நிறைந்தவன். குழி முயலாகத் துள்ளிக் குதிக்கிற அவனது நினைவுகள், சீறுகின்ற புலியாகத் தாண்டிக் குதித்து, வீறு கொண்ட புயலாகச் சுழன்றடிக்கும் எண்ணங்கள் எல்லாம் இயற்கையல்ல. அவை மனித மனத்துடன் பிறந்த மாய்மாலக் காரியங்களாகும். அப்படிப்பட்ட பொய்த் தோற்ற மாயமானை அடக்கி ஒடுக்கி, ஆட் டிப் படைக்கும் ஆற்றல் இருக்கும்போதுதான் நடுவு நிலைமைக்குள் நேர்மை வரும். தூய்மை கிடைக்கும் வாய்மைக்குள்ளும் வலிமை பிறக்கும். அப்படிப் பெறுகின்ற அடக்கப் பண்பு கிடைத்து விட்டால், அதன் பெருமை எப்படியெல்லாம் ஒளிரும், மிளிரும் என்கிற கருத்துக்களையே அடக்கம் உடைமை அதிகாரத்தில் அளித்திருக்கிறார் வள்ளுவர்.