பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


172 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா என்றனர். பூரண அறிவுக்கு வலிய உடல். வலிய மனம் வேண்டும். அந்த முழு உடலில்தான் முழுமையான அடக்கம் வளரும் என்று 3ஆம் குறளில் வள்ளுவர் விளக்குகிறார். 124. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது பொருள் விளக்கம்: நிலை = உலக ஒழுக்கம் (தொழில் ஒழுக்கம்) இல் = இல்லற ஒழுக்கம் திரியாது = (இவற்றில் என்றும்) மாறுபடாது அடங்கியான் = ஒழுகும் ஒழுக்கசீலனின் தோற்றம் = வலிமையும் வார்த்தையும் மலையினும் - உவமையில்லாத வீரத்தை விட மாணப்பெரிது - மிகவும் மாட்சிமை மிக்கதாகும். சொல் விளக்கம்: உலகம் = தொழில்; இல் = இல்லற ஒழுக்கம் தோற்றம் = வலிமை, வார்த்தை, சொல்; மாணம் = மாட்சி; மலை = குன்று, உவமை, வீரம் முற்கால உரை: அடக்கம் உடையவன் உயர்ச்சி மலையினும் மிகப் பெரியது. தற்கால உரை: அசைகின்ற மனிதன் ஒழுக்க நிலையில் மாறுபடாது இருப்பானேயானால், அவனது தோற்றப் பொலிவு அசையாத மலையின் தோற்றத்தை விடப் பெரியதாகும். புதிய உரை: செய் தொழில் ஒழுக்கம், இல்லற ஒழுக்கம் இவற்றில் மாறுபடாமல் வாழும் அடக்கியானின் (உடல்) வலிமையும், சொல்லும், உவமையல்லாத வீரத்தை விட, உயர்ச்சியுடையதாக இருக்கும். விளக்கம்: மனிதன் இல்லறத்தை மிகவும் நேசிப்பவன். செய்கிற பணியில் யோசிப்பவன். இந்த இரண்டிலும் ஒருவன் ஒழுக்கத்தைப்