பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை | 73 பூசிப்பவனாக இருந்தால், அவன் வாழ்வு வலிமை பெற்றுக் கொள்கின்றது. அவனது வார்த்தைகளும் வாய்ச் சொல்லும் தெளிவும், பொலிவும் பெற்றுக் கொள்கின்றன. அவனது எழிலான தோற்றமும், முடிவான சொல் முழக்கமும், மற்றவர்கள் இடையே மிகப் பெரும் சிறப்பையும் புகழையும் பெற்றுத் தருகின்றன. மாறாத இல்லற ஒழுக்கம், மாறாத வாழ்வுக்குரிய செயல் ஒழுக்கம் இரண்டிலும் அடங்கியவன், நிலையாகவும் மலையாகவும் இருப்பது பெரும் வீரம். அந்த வீரத்திற்கு உவமையே இல்லை. உவமை இல்லா வீரத்தைத் தந்து, உலகோரிடை உயர்ந்த பாசத்தை வளர்க்கும் பாங்கு பற்றி வள்ளுவர் 4 ஆவது குறளில் அடக்கத்தின் மேன்மையையும் அடக்கியவன் ஆண்மையையும் அழகுபடக் கூறியிருக்கிறார். 125. எல்லார்க்கு நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து பொருள் விளக்கம்: எல்லார்க்கு = தேவர் போன்றவர்களாகிய அரசர் நன்றாம் = அடங்கிய ஒழுக்கம் சுகத்தைத் தரும் பணிதல் = அப்படிப்பட்ட எளிமையான இரங்கும் ஒழுக்கம் அவருள்ளும் = மற்ற மக்களிடத்தும் காட்டுகிற போது செல்வர்க்கே = அடக்கமுடைய அறனுக்கு செல்வம் தகைத்து - இன்ப வாழ்க்கையில் ஏராளமான நன்மைகளைக் கொடுக்கும். சொல் விளக்கம்: எல்லார் = தேவர், அரவர், துறவியவர், புலவர், மேலோர் பணிதல் = இரங்குதல், எளிமையாதல் ; உள்- மன எழுச்சி தகைத்து - தன்மை, அழகு, ஆற்றல் செல்வம் - அழகு, இன்பம், வாழ்க்கை முற்கால உரை: அடக்கம் பொதுவாக எல்லாருக்கும் நலம் பயக்கும். அது செல் வரிடத்தில் இருக்குமானால், கூடுதலாக தனியொரு செல்வமாக அமைந்து விடும். தற்கால உரை: பணிவு என்னும் உயர் தன்மை பொதுவாக அனைவருக்குமே நன்மையாம். அவ்வனைவருள்ளும் செல்வர்களுக்கு அமையும் பணிவோ, மேலுமொரு செல்வமுடைய சிறப்பினது.