பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை - I75 தற்கால உரை: ஐம்பொறிகளின் அடக்க உணர்வே ஒருவனுக்கு என்றென்றும் எல்லா நிலைகளிலும் துன்பம் அணுகாமல் இருப்பதற்குக் காரணமாய் அமையும். புதிய உரை: ஐம் புலன்களை அடக்கும் ஆற்றலில் உடலுக்கு வெற்றி கிடைப்பதுபோல, உள்மெய்யாகிய மனத்தின் உட்பகையை அடக்கி விட்டால் அவருக்கு மட்டுமல்ல, அவரது ஏழு பரம்பரைக்கும் பாதுகாப்பாக அது அமையும். விளக்கம்: ஒருவனின் ஒழுக்க வாழ்வுதான், அவன் குடும்பத்தை, பரம்பரையைப் பிரதிபலிக்கும். இழிந்த வாழ்வு வாழ்ந்து அழிந்து போன உடல் கொண்டவனுக்கு, உண்டாகும் பரம்பரையும் அழிந்தேதான் தோன்றி அவதிப்பட்டு மறையும். உடலின் வெளிப்பகை ஐந்து. கண், காது, மூக்கு, நாக்கு, மெய். மனத்தின் உட்பகை ஆறு. காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மார்ச்சரியம். ஐந்தடக்கல் ஆற்றின் அதுதான் வெற்றிகரமான உடல் என்பதையே ஒருமெய் (ஒருமை) என்றார். வெற்றிகரமான உடலில் உள்ள மனமும் அதன் உட்பகையை வெல்ல வேண்டும். வென்றால்தான் அன்றைய வாழ்வும் அவரைத் தொடரும். பரம்பரையின் வாழ்வும் நோய்களின்றி நோவுகளின்றி வாழும். ஏழு மெய் = எழுமை. ஏழு மெய்கள் என்பது ஏழு பிறப்பின் தொடர்ச்சி ஆகும். ஆக, தனக்காக மட்டும் வாழாமல் தனது சந்ததிக்காகவும் அடக்கத்துடன் வாழ வேண்டும் என்று விஞ்ஞான பூர்வமான கருத்தை 6 ஆம் குறளில் வள்ளுவர் குறித்துக் காட்டி யிருக்கிறார். 127. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. பொருள் விளக்கம்: யாகாவார் ஆயினும் = எந்த உறுப்பை அடக்கிக் காக்க இயலாவிட்டாலும் நாகாக்க - நாச்சுவையை அடக்கிக் காத்தாக வேண்டும். காவாக்கால் = அப்படி காக்காவிட்டால்