பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I76 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - - - - = சொல் இழுக்கப்பட்டு = பேசும்போது சொற்கள் பிழைபட வெளிவரும் அவல நிலையால் சோகாப்பர் = உறங்கித் துன்பப்படுவர் (எப்படி) சொல் விளக்கம்: நாகாக்க - நாச்சுவையை அடக்கிக் காப்பாற்றுக சோகாப்பர் = உறங்கித் துன்புறுவர் முற்கால உரை: எதைக் காக்காவிட்டாலும், நாவைக் காக்கவேண்டும். தற்கால உரை: ஒருவருக்கு நாவடக்கம் இல்லாவிடில் சொற் குற்றத்தில் அகப்பட்டு அவர் வருந்த வேண்டி வரும். புதிய உரை: சுவை காட்டி சோகத்தில் ஆழ்த்தும் நாவைக் கட்டுப்படுத்தா விட்டால், நோய்களுக்கு ஆளாகி, வாய் கெட்டு, வார்த்தைகெட்டு, உடலால் வதங்கி, சொல்லால் குழறி, துன்பத்திற்கு ஆளாக நேரிடும். விளக்கம்: நா என்பது ஐம்புலன்களில் ஒன்று சுவையறியும் புலன் அது. நாக்கின் இயற்கைப் பணி அறுசுவைகளை அறிந்து, சுவைத்து மகிழ்வது. அதன் பிறகுதான் பேச்சு வருகிறது. பேச முடியாத மக்களும் உலகத்தில் உண்டு. ஆனால், சுவைக்க இயலாத மக்கள் இருந்ததில்லை. இருப்பதும் இல்லை. ஆகவே, நாவின் முதல் பணியான சுவைக்கும் சக்திதான் மனிதரை நோகடிக்கிறது. நோய்களை உண்டாக்கிச் சாகடிக்கிறது. நோய்கள் ஏற்படுவது உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவதால்தான், பெருகும் நோய்களுக்குக் காரணம். சுவைக்கு அடிமையாகி பேராசையால் பெருந்தீனி தின்று நா முதலில் வாயைக் கெடுக்கிறது. பிறகு வயிற்றைக் கெடுக்கிறது. பிறகு வலிமையைக் குறைக்கிறது. உண்ணும் உணவு மிகுதியாததால் பல் பாதிக்கப்படுகிறது. அந்தப் பல் போனால் சொல் போகும் என்பது பழமொழி. பல் இழந்த பொக்கை வாயில் பேச்சு வரும்போது குளறிப் பேசுகிற பேச்சின் அர்த்தமே மாறிப் போய் குற்றம் உண்டாகி, கேட்போரைக் கோபமடையச் செய்கிறது. அதனால்தான் சொல் இழுக்குப் பட்டு என்றார். அதனால் மனவாட்டம், உடல் ஆட்டம் இப்படிப் பல துன்பங்களுக்கு ஆளாக்கிவிடும்.