பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருக்குறள் புதிய உரை 15 1. அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு பொருள் விளக்கம்: ஆதி பகவன் = தொடக்கத்தில் சூரியனிடமிருந்து o முதற்றே உலகு = முதலாவதாக தோன்றிய உலகமும், உயிர்களும், - உலகிலே மேன்மை பெற்ற மக்கள் இனமும், அகரமுதல எழுத்தெல்லாம்-அவர்களால் தோன்றிய அகர எழுத்தும் அதன்வழியாகத் தோன்றிய எழுத்து, சொல், பொருள், யாப்பு, இலக்கண, இலக்கியம், மறை, சுருதி, வேதம் போன்ற கல்வி முறை அனைத்தும் உண்டாயின. சொல் விளக்கம்: ஆதி = தொடக்கம், முதன்மை, சூரியன், எழுத்து, கல்வி பகவன் - பிரிப்பவன், சூரியன், கடவுள் முற்கால உரை: எழுத்துக்கள் எல்லாம், அகரமாகிய முதலை உடையன. அதைப்போல் உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது. தற்கால உரை: எழுத்துகளில் எல்லாம் அகரம் எப்படி முதன்மையாக அமைந்து உள்ளதோ, அதைப்போல், உலகத்திற்கு அறிவாற்றல் மிக்க ஆன்றோர்கள் முதன்மையாக அமைந்திருக்கிறார்கள். புதிய உரை: ஒளி மிகுந்த சூரியன் தோன்றிய பிறகு உலகு தோன்றியது. மக்கள் தோன்றினர். அவர்கள் வாயிலாக அகர முதல் எழுத்துக்கள் தோன்றி வளர்ந்தன. வாழ்க்கை பெற்றன. உலகிற்கு வாழ்க்கையை வழங்கின. ஆகவே, 'ஆதம்' என்கிற பகவனே அனைத்துக்கும் காரணம் ஆகும். - விளக்கம்: பிரிப்பதனால் சூரியன் பகவன் ஆனான். ஆதியிலே தோன்றிய பகவனால் இருளும் ஒளியும் பிரிந்தது. காற்றும் உயிர்க்காற்று மலக்காற்று என்று பிரிந்தது.