பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை I81 14. ஒழுக்கமுடைமை உட்பகை, வெளிப்பகை இரண்டும் தான் மனிதனை பாடாய்ப்படுத்தும் வலிமை கொண்டவையாகும். உட்பகை எல்லாம் மனித மனத்தில் ஏற்படும் திடீர் மருட்சியால், நெகிழ்ச்சியால், எழுச்சியால் உண்டாகின்ற காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறையும், அடக்கினால் அதுதான் அடக்கம் உடைமை. வெளிப்பகையாக விளங்கும் ஐம்புலன்களும், வெறித்தனத்தை, வேட்கைத் தனத்தை, விடலைத்தனத்தை வெளிப்படுத்தும் வேகம் உடையன. அந்த ஐம்பொறி ஆற்றலை அடக்கி வாழ்வதுதான் ஒழுக்கம்உடைமை ஆகிறது. அடக்கம் என்பது மனத்தையும், ஒழுக்கம் என்பது உடலையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் வாரியங்களாகும். தன்னையறிந்தவன் தலைவன் ஆகிறான். தானே தனக்குத் தலைவனும், நட்டானும் என்பதை விளக்குவதுதான் அடக்கமும் ஒழுக்கமும். ஆன்றோர்கள் உருவாக்கியவை எல்லாம் - மக்கள் நல்வாழ்வுக்காகவே, அவர்கள் விதித்தனவற்றைச் செய்தலும், விலக்கினவற்றைத் தவிர்த்தலும் தான் ஒழுக்கத்தின் பண்பாடு ஆகும. உலகத்தோடு ஒட்ட ஒழுகி, மேன்மைத் தன்மையில் நடப்பதைத்தான் ஒழுக்கம் என உரைக்கப்பட்டது. ஒழுகுதல் என்றால், தொடர்ந்து செய்து கொண்டே வருதல், அதை நெடுமையாதல் என்பர். நீட்டித்தல், தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து நடத்துதல் . அந்த அளவின்மை கருதியே, அருமையும் பெருமையும் கருதியே, ஒழுக்கம் என்றனர். மன அடக்கத்திற்குப் பிறகு செயல் ஒழுக்கம் வருகிறது என்பதற்காகவே அடக்கம் உடைமைக்குப் பிறகு ஒழுக்கம் உடைமை எனும் இந்த அதிகாரத்தை வள்ளுவர் வைத்திருக்கிறார். வெளிப்பகையானது புலிப்பகையைவிட பொல்லாதது என்பதையே வள்ளுவர் வலியுறுத்துகிறார்.