பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை I83 132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை பொருள் விளக்கம்: பரிந்து = ஏற்றுக் கொண்டதால், துணிந்து ஒம்பிக் காக்க மன ஒருமைப்பாட்டுடன் காக்க வேண்டியது ஒழுக்கம் = நலமான செயல்களாகும் தெரிந்து = மேலும் ஆராய்ந்தாலும் ஒம்பித் தேரினும் - காப்புக்குரிய காரியங்களை அளந்தாலும் அஃதே துணை = அதுவே (வாழ்வுக்கு) ஆதாரமாக அமைந்திருக்கிறது. சொல் விளக்கம்: பரிந்து - துணிந்து, ஏற்றுக் கொண்டு; தெரிந்து - ஆராய்ந்து, தேரினும் = அளந்தாலும் முகந்தாலும்; துணை = ஆதாரம், உதவி முற்கால உரை: ஒழுக்கத்தைக் காக்கின் அவ்வொழுக்கமே துணை என்பதாகும். தற்கால உரை: ஒருவனுடைய நல்வாழ்வுக்கு ஒழுக்கமே ஏற்ற துணையாக இருக்கும். புதிய உரை: ஒழுக்கத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, துணிச்சலுடனும் ஒருமை மனப்பாட்டுடனும் தொடர்வதே வாழ்வுக்கு ஆதாரமாக அமையும். விளக்கம்: ஒருநாள் பழக்கமாக நல்ல செயல்கள் இருந்தால் அது ஒழுக்கமாகாது. தொடர்ந்து செய்தால்தான் பழக்கமாகி வழக்கமாகி உடலோடு ஒன்றிய இணக்கமாகி விடும். அப்படித் தொடர்வதற்கு முதலில் மனதால் ஏற்றுக் கொள்ள வேண்டும். துணிவின் கனியாக செயல்கள் வேண்டும். ஆக நாம் எத்தனை நூல்களை ஆராய்ந்தாலும் எத்தனை வேதங்களை முகந்தாலும், ஒழுக்கத்திற்குத் துணை துணிவும் ஏற்றுக் கொள்ளும் கனிவும்தான். உடலால் ஒழுக்கம் ஒம்பப்பட விடவே முடியாத சுவாசம் போல நினைவும் செயலும் வேண்டும் என்று முதல் குறளிலும், அப்படிச் செய்வதை ஏற்றுக் கொண்டது போல மன ஒருமையுடன் தொடரும் துணிவு வேண்டும் என்றும், 2வது குறளிலும் ஒழுக்கத்தைப் பின் பற்ற வேண்டின் வேண்டிய உறுதிக் குணங்களை விளக்கிக் காட்டியிருக்கிறார்.