பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


186 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா போகும். மீண்டும் அவனால் உடல் தோற்றத்தை முன்போல பெறவே முடியாது. விளக்கம்: இயற்கை அறிவு, கற்ற அறிவு முதலியவற்றை மதிக்காமல் மறந்து விடலாம். அதனால் ஏந்தப் பாதிப்பும் இல்லை. உடல் செயல்களில் ஒழுக்கம் குறைகிறபோது உடலின் அளவு, அழகு, அமைப்பு, தோற்றம் எல்லாமே மாறி விடும். பார்ப்பான் என்றால், உடலைப் பார்ப்பவன், ஒழுக்கத்தைச் சேர்ப்பவன் தீயதைத் தீர்ப்பவன். ஆகவே, அவனது உடல் கட்டான அமைப்பு இழக்க, காட்சிக்கு கவர்ச்சிகரமானவனாக இருப்பதை இழக்க ஒழுக்கமின்மை காரணம் ஆகிறது என்பதால் ஏற்படுகிற தீமையின் தரிசனத்தைத் துல்லியமாகக் காட்டுகிறார். ஒழுக்கம் உடலைக் காக்கும். உடலுக்கு அழகு சேர்க்கும். நோய்கள் வராமல் தீர்க்கும். அத்துடன் அனைவரும் விரும்பிப் பார்த்துப் போற்றுகிற வளமான உடல் தோற்றத்தை வழங்கும் என்று கூறுகின்றார். 135. அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்றில்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு பொருள் விளக்கம்: அழுக்காறு உடையான் = மனத்து அழுக்காகிய பொறமை உடையவன்; கண் = உடலிலே ஆக்கம் போன்றில்லை = விருத்தி பெருக்கம் போன்று எழுச்சி எதுவும் ஏற்படுவதில்லை. ஒழுக்கம் இலான் = ஒழுக்கம் இல்லாதவன்; கண் - உடம்பிலே உயர்வு = மேன்மை, சிறப்புமில்லை வலிமையுமில்லை, சொல் விளக்கம்: அழுக்காறு = மனத்து அழுக்கு, பொறாமை, கண் = உடம்பு, அறிவு, நோக்கம்; ஆக்கம் = விருத்தி, எழுச்சி, பெருக்கம்; உயர்வு மேன்மை, சிறப்பு முற்கால உரை: அழுக்காறு உடையான் மாட்டு, ஆக்கம் நிலைபெறாது. அதுபோல. ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் சிறப்பு நிலை பெறாது.