பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா o F. தாவரமும் மனிதஉயிரும் வளர்ந்தன. கரியமிலக்காற்றை தாவரங்கள் சுவாசித்து உயிர்க்காற்றை வெளியிட மனிதர்கள் உயிர்க்காற்றைச் சுவாசித்து கரியமில வாயுவை வெளியில் விட, மனித இனமும், தாவர இனமும் ஒரு சேர ஒன்றுக்கொன்று உதவி தழைத்துச் செழித்தன. இயற்கை அனுபவ அறிவால், மனிதன் வாய் திறப்பதால் தோன்றிய 'அ' வரி வடிவம் பெற்று அகரமாகியது. ஒலிவடிவம் பெற்று உயிராகியது. மக்களாகிய உலகில் ஆண் பெண் அலி என்று மூன்று வகை இருப்பது போல, எழுத்திலும் ஆண் பெண் அலி எழுத்துகள் பிறப்பெடுத்தன. - உயிரெழுத்து ஆண் எழுத்து என்றும், உயிர்மெய் எழுத்து பெண் எழுத்து என்றும், மெய்யெழுத்து அலி எழுத்து என்றும் பெயர்பெற்றன. மூவகை மக்களால் பயன்படுத்தப் பட்ட மூவகை எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாயின, பொருள் ஆயின, யாப்பு ஆயின, இலக்கியம் இலக்கணம் என்றாகி, மறை, வேதம், சுருதி என்று எல்லாமே மக்களுக்கு வழிகாட்டும் வான ஒளியாயின, வழிகாட்டும் ஒலியாயின. இவ்வாறு (பகவு+அன்) பகவன் முதற்றே மனித குலத்தின் வாழ்க்கையும் அகர முதலாகிய சொற்குலத்தின் புனித வாழ்க்கையும் எல்லாம் ஆகிப் பல்கிப் பெருகின. . ஆதி=ஆகுதல் என்றும், முதலாவது என்றும் பொருள். பகவன்=சூரியன், கடவுள் என்றும் பொருள் ஆதம் = ஒளி என்று பொருள். எல்லாம்-சான்றோர்களாகிய உலகு பொருள் பொதிந்த சொற்கள் எல்லாம் ஆயின. தெளிவு-உலகம் வாழ உதவுகின்ற உயர்ந்த பாங்கால், பகவனான சூரியனை முதல் குறள் வாழ்த்தி, நன்றி பெருக்குடன் தொடங்கி இருக்கிறது.