பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 138. நன்றிக்கு வித்ததாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். பொருள் விளக்கம்: நல்லொழுக்கம் - உடலுக்கு ஆகின்ற ஒழுங்கான காரியங்கள் நன்றிக்கு வித்தாகும் - நல்வினைக்கும் (மனசமாதானத்திற்கும் விதை போன்றதாகும்) தீயொழுக்கம் - உடலைப் பாதிக்கும் காரியங்கள் எல்லாம் இடும்பை - உடலுக்கு நோய், வளமில்லாத வறுமை போன்றவற்றை என்றும் தரும் எப்பொழுதும் தந்து கொண்டே இருக்கும். சொல் விளக்கம்: வித்து = அறிவு, விதை நன்றி = அறம், நன்மை, நல்வினை, சமாதானம் இடும்பை - அச்சம், ஆபத்து, நோய், வறுமை முற்கால உரை: H நல்லொழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும். தீய ஒழுக்கம் துன்பத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். தற்கால உரை: ஒருவருக்கு நல்லொழுக்கம் இன்பத்தையும் தீயொழுக்கம் துன்பத்தையும் தரும் புதிய உரை: நல்லொழுக்கமானது மனச் சமாதானத்தை விளைவிக்கும். தீயொழுக்கமோ தினம் தினம் அச்சம் ஆபத்து வறுமை போன்றவற்றைக் கொடுத்து வாழ்வையே அழித்து விடும். விளக்கம்: நல்லொழுக்கம் நல்ல உடலை வளர்த்துக் காப்பதால் உடலில் நலமும் பலமும் வளமும் தினம் சேர, அதனால் மன அமைதியும் சமாதானமும் கிடைக்கிறது. உடலும் மனமும் ஒருசேர பயன் பெறுவதால் வாழ்வே சிறப்பும் பெருமையும் அடைகிறது. தீய ஒழுக்கமானது உடலைப் பாதிப்பதால் உள்ளுறுப்புக்கள் சேதம் அடைவதால், நலிவும் செயலிழப்பும் அடைய, உடலோ CR er rru' ப் பெ . . . . . . . ո (Չ, տ, ன்பம்ெ (2 r 3 நாயகளைப மiபற, உடலுறுபபுககளோ துனபமமiபற, மன மா அச்சம் கொள்ள, வாழ்க்கையோ வறுமையில் வதங்கி என்றும் ஆபத்து ஏற்படும் என்கிற அச்ச உணர்விலே வாழ நேர்கிறது.