பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 193 விளக்கம்: ஒன்றை மனத்தால் ஏற்றுக் கொள்வது ஒத்துப் போவதாகும். ஒன்றுடன் உடலால் ஒத்துப் போவது ஒட்டிப் போவதாகும். மனத்தாலும் உடலாலும் ஒத்தும், ஒட்டியும் போவது ஒன்றிப் போவதாகும். ஒன்பது பாடல்களிலும் இயற்கையோடு உலக மக்களோடு ஒத்துப் போவதைக் கூறி வந்த வள்ளுவர். பத்தாவது பாடலில் உடலாலும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால், ஒழுக்கமுடன் வாழ முடியும் என்கிறார். மற்ற மக்கள் வாழ்க்கை முறைகள் ஒன்றுக்கொன்று சேராது முரண்படுவதால் தான் உலகுடன் என்று சொல்லாமல் உலகத் துடன் அதாவது இயற்கையுடன் வாழ்ந்து ஒழுகச் சொல்கிறார். காற்று தீ, நீர், பூமி, ஆகாயம், இவற்றை ஒட்டி பயன் படுத்தி வாழ்பவர்கள் மேன்மக்கள், வாழத் தெரியாதவர்கள் மூடர்கள், அறிவிலிகள். கீழ்மக்கள் என்று இயற்கை ஒழுக்கம் பார்த்து மனிதரின் செயல் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்பதை வெள்ளிடை மலையாகக் காட்டுகிறார்.