பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை I97 143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துஒழுகு வார் பொருள் விளக்கம்: மன்ற = தோற்றத்தில், தெளிந்தார் = மெய்யுணர்ந்தவராக இருந்தும் இல் தீமை புரிந்தவர் - மற்றவர் இடத்திலே தீமை செய்து ஒழுகுவார் = நடந்து கொள்கிறபோது வேறல்லர் - அவர் வெற்றி கொள்கிறவராக அவர் இல்லை (ஏனென்றால்) விளிந்தார் - அவர் செத்தவர்க்குச் சமமேயாவார் சொல் விளக்கம்: விளிந்தார் = இறந்தவர்; வேறல் = வெற்றி, தீமை - கெடு மன்ற = தோற்றம் (காட்சி), தெளிந்தார் = மெய்யுணர்ந்தார் முற்கால உரை: தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவம் செய்தலை விரும்பி ஒழுகுவார். உயிருடையரேனும், அவர் இறத்தாரே ஆவார். தற்கால உரை: தெளிந்தாருடைய இல்லானிடத்துத் தீமை புரிபவர், செத்தாராவார். புதிய உரை: தோற்றத்திலும் காட்சியிலும் மெய் உணர்ந்தார் போல இருப்பினும், நம்பியவர்க்குக் கேடு செய்பவர் வெற்றி பெற்றவர்கள் இல்லை. அவர்கள் செத்தாருக்குச் சமமானவர்கள் ஆவார்கள். விளக்கம்: நம்பினார்க்குத் துரோகம் செய்வது பெரும் பாவமாகும். தாம் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும், தோற்றத்தில் கம்பீரமும், காட்சியில் கவர்ச்சியும், உள்ளவர்களாக இருந்தாலும், தம்மை நம்பியவர்களுக்குத் தீமை செய்யும் விழைவு இருக்கிறதே, அது ஒருவரது உள்ளுணர்வைக் கொன்று விட்டுத்தான் வெளியாகிறது. ஆகவே, மனச்சான்றைக் கொன்றவர் மனிதரில்லை. அவர் நடமாடும் சவம் செத்தார்க்குச் சமம் என்று பண்பில்லாமல், நம்பியவர்க்கு மோசம் செய்யும் மனிதர்களை (பீடைகளை) குத்திக் காட்டுகிறார் வள்ளுவர், தீமை என்றது இங்கு விழைவு மட்டுமல்ல, களவும், இழவும் தான்.