பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


198 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 144. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல் பொருள் விளக்கம்: எனைத்துணையும் - எவ்வளவு நட்பினனாக ஆயினும் இருந்தாலும் என் ஆம் = என்னவாகும்? தினைத்துணையும் = மிகச் சிறுமை மனம் கொண்டு தேரான் = கீழ்மகன் போல பிறனில் = பிறன் வீட்டிற்குள்ளே புகல் = தானியக் குதிர் கவரச் செல்லுதல் சொல் விளக்கம்: துணை = நட்பினன்; தினை = சிறுமை, . தேரான் = கல்லாதான், கீழ்மகன்; புகல் = தானியக்குதிர், உடம்பு முற்கால உரை: எத்துணைப் பெருமையுடையாராயினும், காமமயக்கத்தால் தின்ையளவும் தம் பிழையை ஓராது, பிறனுடைய இல் லின் கட்புகுதல், அவரது சிறப்பை அழிக்கும். தற்கால உரை: பிறன் மனையாள்பாற் செல்பவன், தனது பெருமையை எல்லாம் இழப்பான். புதிய உரை: பிறன் இல்லத்தில் புகுந்து தானியம் திருட முயற்சிப்பவன், எத்துணை அளவு நட்பினனாக இருந்தாலும் அவன் கல்லாத கீழ்மகனாகவே இழிந்துரைக்கப்படுவான். விளக்கம்: பிறர் இல்லம் என்றதும் பெண்ணை நாடித்தான் போவார்கள் என்பது பொதுவானதுதான். அதற்கும் மேலே உயிர் வாழ உண்டி வேண்டுமல்லவா? பண்டம் மாற்றுக் காலத்தில் எழுதப்பட்ட குறள். அந்நாளைய பழக்க வழக்கத்தையே சுட்டுவதாக அமைந்திருக்கிறது. தானியம் வைத்திருக்கும் குதிர் என்பதற்கு புகல் என்றொரு சொல் உண்டு. புகுதல், தானியக் குதிர் என்ற இரு பொருளில் வள்ளுவர் கூறுகிறார். நட்புக்குரியவன் வீட்டில் தானியம் திருடுவதற்காக நுழைவது கீழ் மகன் செயல் என்று