பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 17 2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் பொருள் விளக்கம்: கற்றதனால் ஆய பயனென் - உடல் பற்றிய மெய் அறிவு செல்வத்தால் என்ன பயன் உண்டு? வாலறிவன்-பேரறிவுடையவரது நற்றாள்=நல்ல ஞானத்தை தொழாஅர் எனின் = மதித்து வணங்கி ஏற்றுக் கொள்ளாராயின். சொல் விளக்கம்: வாலறிவன் - பேரறிவு உடையவன்; நற்றாள் - நல்ல ஞானம் முற்கால உரை: எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவினாலாய பயன் யாது? மெய்யுணர் வினையுடையானது நல்ல தாள்களைத் தொழாராயின். - தற்கால உரை: ஒருவன் தான் மேன்மை ஆவதற்குக் காரணமாக, கல்வி ஆற்றலில் சிறந்தோரின் அறிவுரைப்படி நடப்பதே அவன் கற்ற கல்வியால் எதிர்பார்க்கப்படும் பயன் ஆகும். புதிய உரை: h உடல்பற்றிய மெய்யறிவு உடையவர்களின்ஞானத்தை மதித்துப் பணிந்து, வணங்கி ஏற்றுக் கொள்ளும்போதுதான், கல்வி கற்றுப் பெற்றதின் அறிவினால் பயன் ஏற்படும். விளக்கம்: பிறப்பு முதல் மனத்துக்குள் மலர்ந்த பெரும் சக்தி என நம்பிக்கையில் நிறைந்து நின்று உலா வருகிற கடவுளை மன அமைதிக்காக வணங்கலாம். அதுதோன்றாத் துணையாகும். இங்கே பேரறிவாளனாக விளங்கும் குருவான தலைவர் வழிகாட்டி, வளமாக வாழ்விக்கிற சக்தி வாய்த்தவராக இருக்கிறார். அவர் தோன்றிக் காணப்படுகிற துணையாவார். கண் முன்னே காணப்படுகிற கடவுள் போன்றவரைத் தெரிந்து, தெளிவதுதான் கல்விக்கு அழகு; கற்பவர்க்கும் பெருமை. o