பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 20.3 தற்கால உரை: பிறன் மனையாளைக் காதலியாமை, அறமும் ஒழுக்கமும் ஆகும். புதிய உரை: பிறரது இல்லம் பற்றிய உள்ளத்தில் சிந்தனையேயில்லாது வாழ்வது, அறிவொழுக்கங்களில் சிறந்தவருக்கு மேலும் மாட்சிமையை அளித்து அறனாக வாழ வைக்கிறது. விளக்கம்: பிறர் மனையைக் கண்ணால் கண்டால் மனம் மாறுவது, அதை மாற்ற முயல்வது, தடுப்பது என்பது இயல்பான செயல்பாடுகளாகும். மற்றவர் மனை பற்றி, மனத்தாலும் எண்ணாமல், அதில் அக்கறை செலுத்தாமல் வாழ்வது யாராலும் முடியாது என்பதால்தான், இவ்வரிய செயலைப் பேராண்மை என்றார். இத்தகைய பேராண்மையே அறிவொழுக்கம் உள்ளவர்க்கு மேலும் மதிப்பையும் மகிமையையும் அளித்து பெருமையை வழங்குகின்றது. அதனால் அறம் காக்கும் இல்லறத்தான் அறனாகிறான். அதாவது தருமம், நீதி காக்கும் தவத்தன் ஆகிறான். ஆகவே, பிறர் வீட்டுப் பெண்ணை மட்டுமல்ல. பொருள் மற்றும் உயர்ந்தவைகள் எல்லாவற்றையுமே மறந்தும் நினையாது அறம் காக்கிற பேராண்மை ஒருவரை உயர்த்திக் காக்கிறது என்று 8 ஆம் குறளில் கூறுகிறார். 149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பிற் பிறர்க்குரியாள் தோள்தோயா தார் பொருள் விளக்கம்: நலக்குரியார் யாரெனின் = மன அழகும் குண அழகும் உடலழகும் படைத்தவர் யாரென்றால் நாமநீர் வைப்பில் கடல் சூழ்ந்த இந்தப் பூவுலகில் பிறர்க்குரியாள் = பிறருக்கு உடமையும் உரிமையுமானமாது. தோள் தோயாதார் = தோள்களைத் தழுவாதவரேயாவார். சொல் விளக்கம்: நலக்குரியார் = மன அழகு, குண அழகு, உடல் அழகு பிறர்குரியார் = பிறருடைய உடமையும், உரிமையும்.