பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ᎤᏮ டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 16. பொறையுடைமை பொறை உடை மெய் என்று பிரித்துப் பார்க்கிறேன். பொறை என்றால் பொறுமை. பொறுமை என்றால் சகிப்புத் தன்மை. ○ Զ) o + . + _* ெ இக் * £ ". Ст. Ո , மபாறுத எனறும் கூறுவாாகள. மiபாறுதககு, தணவு, மனனபபு என்றும் பொருள் உண்டு. அவாவுதல் என்பது மனதுக்குப் பிடித்தது. அதை தூண்டி விடுவதற்கும் சீண்டி விடுவதற்கும் ஐம்பொறிகளுக்குப் பெரும் ஆசை உண்டு. ஆக, தன்னிடம் இருப்பதை மறந்து விட்டு, இகழ்ந்து விட்டு, பிறர் வைத்திருக்கும் பொருளுக்கும் பிறவுக்கும் பேயாய்ப் பறப்பதுதான் மனித மனத்தின் மாயம். இந்தப் பேராசையால் பெருக்கெடுத்து ஒடுகின்ற துன்பங்கள், துயரங்கள், சங்கடங்கள் சமர்புரியும சந்தர்ப்பங்கள், பகைகள், பாய்ச்சல்கள், பரிதாப விளைவுகள் எல்லாம் ஏராளம்; ஏராளம். மனமோ எல்லாவற்றிற்காவும் ஏங்கிக் கொள்ளும். எதுவாக இருந்தாலும் வாங்கிக் கொள்ளும். ஏற்றபடி நிகழாவிட்டால் (பின்) வாங்கிக் கொல்லும். தூங்கியும் கொல்லும். உடலோ அப்படியில்லை. எதையும் தாங்கிக் கொள்ளும். இறுதிவரை விரும்பாத முயற்சியில் ஓங்கி நிற்கும். இப்படித் தாங்குகின்ற பொறையை, சகிப்புத் தன்மையை, தணிந்து போகும் மகிமையை, மன்னித்து ஒதுங்கும் பாங்கை மெய் உடையாக அணிந்திருப்பதால், இதைப் பொறை உடை மெய் என்று வள்ளுவர் போற்றினார் போலும். பிறரது இல்லத்தைப் பற்றியும் உள்ளத்தைப் பற்றியும், செல்வம் பொருள் பற்றியும் துடிக்கும் தன்மையைத் தணிக்கவே பிறனில் விழையாமை என்று விளக்கிய பிறகு அதற்குரிய உடல் பக்குவத்தையும் மனப் பக்குவத்தையும் வளர்ப்பது அவசியம் என்பதற்காகவே பொறை உடைமை அதிகாரத்தை அதற்கு அடுத்ததாக வள்ளுவர் வைத்திருக்கிறார்.