பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


208 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தொடர்ந்து தோண்டி பள்ளமாகவும் படுகுழியாகவும் ஆக்கியவரை அதில் விழாமல், சகித்துக் கொண்டு, ஆதாரமாக இருந்து ஆதரித்து, கெளரவிப்பது நிலத்தின் பொறை. தொடர்ந்து தன்னைத் தாக்கியபடி, அவமானப்படுத்தி, இழிவு செய்கிற பகை மனத்தவரையும், நோன்பு நோற்பதுபோல தவம் காத்தல் போல, அவரை மன்னிக்கிற மாண்புடைமைதான் தலை என்றார். தலை தலைவன், உயர்ந்தோன் என்றார். தவ மகனாக சிறப்பதால்தான், அவர் இகழ்பவரை விடப் புகழ் மிக்கப் புண்ணியராக விளங்குகிறார் என்கிறார் வள்ளுவர். 152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று பொருள் விளக்கம்: பொறுத்தல் = பிறர் தீங்கினை மன்னித்தல் இறப்பினை என்றும் - எப்பொழுதும் தொந்தரவை அதிகப்படுத்தும் அதனை = அந்தத் தீங்கினை மறத்தல் = மனத்திலிருந்து நீக்கி விடுதல் அதனினும் = மன்னிப்பதைவிட நன்று = வாழ்வைச் சிறக்கச் செய்யும்; சுகத்தைக் கொடுக்கும். சொல் விளக்கம்: இற = அதிகரித்தல்; பினை = தொந்தரவு படுத்துதல்; அதனை - மிகுதி: மறத்தல் = அசட்டை பண்ணுதல், விட்டு விடுதல் நன்று = சுகம்; சொர்க்கம், வாழ்வுச் சிறப்பு முற்கால உரை: பிறர் குற்றத்தைப் பொறுத்தலினும் அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பொறையினும் நன்று. தற்கால உரை: பிறர் செய்த தீமையை எப்பொழுதும் பொறுக்க வேண்டும். அதைவிட மறத்தல், அனைவருக்கும் நன்மை. புதிய உரை: பிறரது தீங்கினைப் பொறுக்கிறபோது மேலும் அந்தத் தொந்தரவு அதிகப்பட்டுக் கொண்டே வரும் என்பதால், தீங்கை மன்னிப்பதை விட, மனத்திலிருந்து விட்டு விடுவதே சுகத்தை அளிக்கும்.