பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I8 டாக்டர் எஸ். நவாாஜ் செல்லையா == o மிகவும் தெளிவான மெய்ஞ்ஞானம் மிகுந்த குருவானவர் யார்? அவரால் நமக்கு எப்படி நன்மை வரும்? எவ்வளவு வரும்? அதனால் தன் வாழ்வு எத்துணை அளவு மேம்படும் என்று தெளிந்து கொள்ள வேண்டும். அப்படித் தெளியாத குழப்ப அறிவைக் கொண்டிருக்கிற கற்றவரால் பயனில்லை. கற்ற தனாலும் பயன் இல்லை. அறிவின் பிரிவு தெளிவு. தெளிவின் தேர்ச்சி ஞானம். விஞ்சிய ஞானம் விஞ்ஞானம். மெய்யுணர்வு மிக்க ஞானம் மெய்ஞ்ஞானம். மெய்ஞானத்தின் மேன்மையாளரை அணுகி, அவர் பேரறிவினை ஒளிமிகு ஞானத்தைத் தொழுது ஏற்றி ஏத்தி, இணங்கி, வணங்கித் துதிக்க வேண்டும். சுகிக்க வேண்டும். கல்லாதாரும் கடவுளைத் தொழுகிறார். கடவுளைத் தொழக் கல்வி தேவையில்லை. பக்தியே போதும். பக்தி அன்பின் வெளிப்பாடு. கல்வி அறிவின் திறப்பாடு. (வி=அறிவு) ஆக, கற்றவர் அறிவது அவர் கற்றுத்துறை போகிய பேரறிவின் ஞானத்தை ஒளிமிகு ஞானத்தைத் தொழுது பின்பற்றி வேண்டும். அத்தகைய அறிவாற்றல் மிக்க குருவானவரைக் கொள்வதே கல்வியின் பயன்; கற்றவரின் திறன் என்கிறார் வள்ளுவர். தாள் என்பது முயற்சி. ஞானம் என்றும் அர்த்தம். அடி என்பது ஞானம் தான். (அளவிலா அறிவுடையோரை அடிகள் என்றுபோற்றுவது தமிழர் மரபு. அன்று இளங்கோ; இன்று மறைமலை அடிகள் போன்றோர்) தொழா அர் எனில் என்பது அறிவுடை குருவைத் தேர்ந்து கொளல். (41) அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். கற்றதன் பயன் நிகழ்காலத்தில் சந்தித்து வாழ்தல். எதிர்காலத்தில் சிந்தித்து வாழ்தல். இறந்த காலத்தில் வந்தித்து வாழ்தல். 3. மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். பொருள் விளக்கம்: மலர்மிசை=மலர்ச்சியும் எழுச்சியும் களிப்பும் உயர்ச்சியும் மிகு உணர்வுடன். - ஏகினான்-வாழ்ந்து வருகிற(வாழ்ந்து காட்டுகிற) மாண் அடி=மாட்சிமை மிக்க குருவானவரின் ஞானத்தைக் கற்றிட சேர்ந்தார் = இடைவிடாது அவரையே நினைத்து, அவரிடம் தன்னை