பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 21,3 உயர்ந்தோர்கள் பொறுத்தருள்வார் செயலைப் போற்றி மகிழ்வார்கள். நெஞ்சில் வைத்துக் காப்பார்கள் என்று வள்ளுவர் உரம் வாய்ந்த, தரம் வாய்ந்த உடல் வளம் பற்றி 5வது குறளில் கூறுகிறார். 156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் பொருள் விளக்கம்: ஒறுத்தார்க்கு தண்டித்து அழித்தவர்க்கு இன்பம் = ஏற்படுகின்ற சுகமானது ஒருநாளை - ஒரு புதுமையாக இருக்கலாம் பொறுத்தார்க்கு = மன்னித்து மனமார மறந்தார்க்கு பொன்றும் = குறைவில்லாத துணையும் புகழ் = ஆற்றலும் ஏற்றமும் கொடுக்கும் சொல் விளக்கம்: நாள் - புதுமை, இளமை; பொன்றுதல் = குறைதல் துணை = ஆற்றல்; புகழ் = ஏற்றம் மேம்பாடு முற்கால உரை: பிறர் குற்றம் கண்டு தண்டித்தவர்க்கு ஒருநாளை இன்பம். பொறுத்தவர்க்கு உலகம் அழியும் அளவும் புகழ் உண்டாம். தற்கால உரை: தண்டிப்போர்க்கு அந்நொடியே இழிந்த இன்பம். பொறுத்தார்க்கோ உலகம் உள்ள வரையில் புகழ் உண்டாம். புதிய உரை: தண்டிப்பவருக்கு ஏற்படுகிற சுகமும் மகிழ்ச்சியும் ஒரு புதுமையாக மட்டுமே தெரியும். ஆனால் மனமாரப் பொறுப்பவருக்கு ஆற்றலும் மேம்பாடும் பெருகி வளரும். விளக்கம்: பிறரைத் தண்டிக்கும் போது ஏற்படுகிற சுகமும் அழித் தொழிப்பதைக் காணும்போது பெறுகிற எழுச்சியும், புதுமையாகத்தான் தோன்றும். அந்தப் புதிய சூழ்நிலையில் ஆழ்ந்து போனால், அமிழ்ந்து போய்விட நேரிடும். அது போன்ற இழிந்த எழுச்சி, பிறகு மன உலைச்சலை உண்டாக்கி விடும். ஆனால் பொறுத்துக் கொள்கிறபோது உடலுக்குள் உண்டாகிற