பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 215 விளக்கம்: தீவினைகளை அறியாமல் செய்யலாம். மதி மயக்கத்தால் பொறாமையால், காரணமறியாமலும் கூடச் செய்யலாம். அத்தகைய செயல்கள் ஒருவருக்கு மனப் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் பலவீனத்தை ஏற்படுத்தும். உடலிலும் மனதிலும் வேதனைகளை விளைவிக்கும். இப்படிப் பல தொந்தரவுகளைத் தூண்டுகிற தீவினையால், மனம் மாறுபடவும் கூறுபடவும் வேறுபடவும் கூடிய சூழ்நிலையும் அமைந்து விடும். அப்பொழுதும், ஆத்திரம் பிறக் கிற நேரத்தும் அமைதியைக் காத்து அறனல் லாததை செய்யாதவன்தான் அறன் ஆகிறான். ஒழுக்கத்திற்கு உயிர் தருபவன்தான் அறன். ஆகவே 7 வது குறளில் அறனின் பண்பே அல் வினை தவிர்ப்பதுதான் என்னும் கொள்கையைக் கூறி வழிப்படுத்துகிறார் வள்ளுவர். 158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தன் தகுதியான் வென்று விடல். பொருள் விளக்கம்: மிகுதியான் = இறுமாப்புடன் கீழ்மைத் தன்மையான கொடுமையால் மிக்கவை = அழிக்கின்ற செயல்களை செய்தாரை = செய்கின்றவர்களை தாந்தன் - ஐம்புலன்களையும் வென்ற மன அடக்கமுள்ள தகுதியான் = தனது நடுவுநிலையான ஒழுக்கத்தால் வென்றுவிடல் = வென்றுவிட வேண்டும். சொல் விளக்கம்: மிகுதி = கடுமை, கீழ்மை, இறுமாப்பு மிக்கவை = அழித்தல், எச்சில்படுத்துதல் தாந்தன் - ஐம்புலன்களையும் வென்றவன், தாந்தி தகுதி = நல்லொழுக்கம், நடுவுநிலைமை, ஏற்ற வல்லமை முற்கால உரை: மனச்செருக்கால் பிறர் தீமை செய்தாலும், அவர்க்கு நன்மை செய்து பொறுமையால் வெல்ல வேண்டும். தற்கால உரை: ஆணவத்தார் தந்த துன்பத்தை, மனித நேயத் தகுதியால் வென்று அதையும் மறந்து விடுக.