பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புதிய உரை: இறுமாப்பும் கீழ்மதியும் கொடுந்துணிவும் கொண்டு துன்பம் தருபவருக்கும், மன அடக்கம் தரும் ஒழுக்கப் பண்புடன் நல்லவை செய்து அவரை வென்றிட வேண்டும். விளக்கம்: மிகுதியான் என்றது எல்லாவற்றிலும் அதிகமான குணங்களைக் கொண்டவன். இங்கு இறுமாப்பாகிய மனச்செருக்கு கிறங்கிய கீழ் புத் தி. அதிலும் கடுமையும் கொடுமையும் நிறைந்ததும் அவன் செய்கிற அல்லல், துன்பம் எல்லாம் மிகுதியாகத் தானே இருக்கும். அப்படிப்பட்ட நிலையை, ஐம்புலன்களையும் வென்று, மன அடக்கம் மிகுந்து தவத்தின் போதும் ஏற்படுகிற துன்பங்களைச் சகித்து வெற்றி பெறுகிற தன்மை போல, இந்தத் தீவினையாளரையும் வென்று மேன்மைகள் எய்திட வேண்டும் என்று 8 வது குறளில் விளக்குகிறார். தீவினையை எதிர்கொள்வது தவம் செய்வதுபோல. அதில் விளைகின்ற துன்பமும் சங்கடமும் தவத்திற்கிடையே தோன்றும் துயர்களைப்போல, தவமகன் போல அதனை வென்றிட வேண்டும் என்ற ஒரு தகுதி நிலையை இங்கே குறித்துக் காட்டுகிறார். (சிலர் தாம் தாம் என்றும், சிலர் தாந்தம் என்றும் எழுதுகின்றனர். தாந்தன் என்றே நான் பொருள் கொண்டிருக்கிறேன்.) 159. துறந்தாரிற் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். பொருள் விளக்கம்: இறந்தார் வாய் ஒழுக்கத்தில் இழிந்தவர் இடத்துப் பிறக்கிற இன்னாச் சொல் = கீழ்மை மிகுந்த சாபத்தையும் கட்டளையையும். நோற்கிற்பவர் = சகித்துக் கொள்கிற சக்தி மிகுந்தவர் துறந்தாரிற் நிலம், புலம் துறந்தவர்களை விட தூய்மை உடையர் = தூய (மெய்யில்) திண்மையாளராவார் சொல் விளக்கம்: சொல் - சாபம், கட்டளை இன்னா = கீழ்மையான தீமை, நோற்க - சகிக்க முற்கால உரை: தீய வழியில் நடப்பவரது கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர், துறவிகள் போல பரிசுத்த குணம் உடையவர்.