பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 217 தற்கால உரை: துன்பம் தரும் முறையற்ற கடும் சொல்லைப் பொறுப்பவர், துறவியை விடச் சிறந்தவராம். புதிய உரை: இழிந்தவர் இடுகிற கட்டளையையும் சாபத்தையும் சகித்துக் கொள்கிற சக்தியாளர்கள், சகலத்தையும் துறந்தவர்களை விட மனத்திண்மையாளர்கள் ஆகிறார்கள். விளக்கம்: திண்மையான உடலில் தான் வன்மையான மனம் இருக்கும். இழிந்தவர்கள் பேசுகிற பேச்சு எல்லாமே ஆணையிடுவது போலவும், கட்டளை பிறப்பிப்பது போலவும், சபிப்பது போலவும்தான் இருக்கும். அதனால்தான், அதனை இன்னா சொல் என்றார்.இழிந்தவர்கள் எங்கும் இருப்பார்கள் என்பதைக் குறிக்கவே, பவர் என்ற சொல்லையும் இங்கே பயன்படுத்தியிருக்கிறார். பவர் என்றால் எங்கும் இருத்தல் என்பதாம். நிலம், புலம், நலம் துறப்பதற்கு நெஞ்சிலே உறுதி வேண்டும். உடலிலே வலிவு வேண்டும். அதனால்தான், நோற்க என்றார். நோற்க என்றால் சகித்துக் கொள்ள தவ குணங்கள் மிக்கவை என்று நோற்கிற் என்றார். தூய்மை என்பது தூய் + மெய் ஆயிற்று. தூயதான உடல், தூயதான மனம்; தூய தான செயல். ஆகவேதான் ஒன்பதாம் குறளில் சகித்துக் கொள்கிற மனம், சோதனையை ஏற்கிற தேகம், சக்தி நிறைந்த வாழ்க்கை என்று குறிக்க தூய்மை, நோற்க என்ற சுவையான சொற்களை வள்ளுவர் பெய்திருக்கிறார். 160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரிற் பின் பொருள் விளக்கம்: உண் ஆது அவாவுடன் அனுபவித்து நோற்பார் - (திச் செயல்களை) சகித்துக் கொள்கிற பிறர்சொல்லும் - அயலார் இகழ்ந்துரைக்கிற இன்னாச்சொல் = கீழ்த்தரமான சாபச் சொற்களை, நோற்பார் = சகித்துக் கொள்கிற பெரியர் = உயர்ந்த பண்பு உடையவர் மட்டுமல்ல இல்பின் அவரது குடிப்பெருமையையும் (மிகுதியாகக்) காட்டும்