பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


218 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: உண் = அனுபவித்தல்; ஆது அவா, பின் = பெருமை இற்பின் - குடிப்பெருமை; நோற்க - சகித்துக் கொள்ளுதல். முற்கால உரை: பிறர் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு, தவத்தர் பின்னாவர் என்பதாம். தற்கால உரை: தீய சொல் தாங்கும் மனித நேயத்தர், பசி தாங்கித் தவம் செய்வாரை விட உயர்ந்தவர் ஆவார். புதிய உரை: பிறர் கூறும் இகழ் மொழிகளை, சபிக்கும் சொற்களைப் பொறுத்துக் கொள்பவரின் செயல் உயர்ந்த பண்பால் மட்டுமல்ல, அவரது குடிப் பெருமையும் உயர்ந்து விளங்கும். விளக்கம்: பொறைப் பண்பு ஒருவரின் தனிப் பட்ட பண்பாக இருக்கலாம். அது குடிப் பெருமையின் கோலத்தாலும் தொடர்ந்து வருகிற சீலமாகும். அந்த சீலம்தான் மன அடக்கமாக, நடுவு நிலைமையை நிலை நிறுத்தும் நல்லொழுக்கமாக, வல்லமை சேர்ந்த வழித்தடமாக தொடர்கிறது. இகழ்வைச் சகிக்க, அனுபவிக்க, ஆற்றல் கொள்கிற மனம்தான் அவரை உயர்ந்தோராக ஆக்குகிறது. அந்த உயர்வுதான் குடிப் பெருமையின் வெளிப்பாடாக, வல்லமையுள்ள விழுதாக வளர்ந்து வருகிறது. பின் என்றால் பெருமை. இல் என்றால் குடிமை. நோற்பாரின் குடிப் பெருமை, குலப் பெருமையே, பொறை உடைமையின் பிறப்பிடமாக, சிறப்பிடமாக மிளிர்கிறது என்பதை அறனின் பிறப்பிடத்தை சுட்டிக் காட்டி இகழ்ச்சியிலும் சுகம் காணும் தெளிந்த மனத்தை, அதன் சக்தியை அற்புதமாகக் கூறி முடிக்கிறார்.