பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 223 புதிய உரை: (எழுச்சிதரும்) ஒழுக்கமான வாழ்க்கையை விரும்பாதவனே பிறன் விருத்திமிகு வாழ்க்கையைப் போற்றாமல் பொறாமை கொள்கிறான். விளக்கம்: பிறரது வளமான வாழ்க்கையை விரும்பாதபோது, அவருக்கு அவர் பகைவராகி விடுகிறார். பகை கொள்கிற மனத்தில் அன்பு இருக்காது. செயலில் ஒழுக்கமும் இருக்காது. தர்மத்தின் வழக்கமும் இருக்காது. பிறரை சிந்தனை செய்தே, சிந்தை நொந்து போகிறவர் வாழ்க்கையும் நைந்து போகிறது. நலிந்து போகிறது. களங்கப்பட்ட மனதுடன் வாழும் வாழ்க்கை விளங்காது. வளர்ச்சி பெறுகிற எழுச்சியும் பெருத்து நிறைகிற விருத்தியும் பொறாமை கொள்கிறவர் வாழ்வில் பொசுங்கிப் போகிறது. ஆகவேதான், பொறாமையின் உண்மை நிலையை முதல் இரண்டு குறள்களில் கோடிட்டுக் காட்டிய வள்ளுவர், மூன்றாம் குறளில் மற்றவர் வாழ்க்கையைக் கண்டு பகை உணர்வு கொள்கிறபோதே தன் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் தடையாகி விடுகிறான். தானே தனக்குப் பகைவன். தன்னைச் சிறுவனாகச் செய்பவனும் தானேதான் என்பது போல, தன்னைத் தாழ்த்திக் கொள்கிற, வீழ்த்திக் கொள்கிற பகைவனாக்கி விடுகிறது பொறாமை குணம் என்பதால்தான் அழுக்கு அறுப்பான் என்ற ஆணித்தரமான சொல்லை இங்கே பெய்திருக்கிறார். 164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து பொருள் விளக்கம்: இழுக்காற்றின் = கீழ்மை நிறைந்த கேடுதரும் பொறாமையால் ஏற்படும்; - ஏதம் படுபாக்கு = கொடிய வல்லமை கொண்ட அல்லவை - தீமைகளை அறிந்து அறிந்து கொண்டதால் அழுக்காற்றின் = தான் கொண்ட மனக் கோட்டத்திற்கு (பொறாமைக்கு) செய்யார் = (நல்லவர்கள்) பகைவர்காளாகி விடுகிறார்கள்