பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: அல்லவை = தீயவை, தீமை; ஏதம் - கேடு, குற்றம், துன்பம் படு = கொடுமை; பாகு = வலிமை; செய்யார் = பகைவர் முற்கால உரை: பெரியோர் பொறாமையால் பாவங்களைச் செய்யார். தற்கால உரை: பொறாமை காரணமாகத் துன்பம் ஏற்படுவதை அறிந்த அறிவுடையார், அறமல்லாத தீய செயல்களைச் செய்ய மாட்டார். புதிய உரை: கீழ்மையான பொறாமையால் ஏற்படும் கொடிய தீமைகளை அறிந்து கொண்ட பெரியோர்கள், பொறாமைக்கே பகைவர்களாக மாறி விடுகின்றார்கள். ஒருவர் பொறாமையால் பாவங்களைச் செய்யாமல் இருப்பது என்பது ஒரு வகை. பாவங்களின் கொடுமையை அறிந்து பாவங்களைச் செய்யாமல் இருப்பது இன்னொருவகை. கொடிய பாவங்களின் தீமைகளைக் கண்டு, அவற்றை உண்டாக்குகிற பொறாமைக்கு எதிரிகளாகி, அதிலே பகைமை பூண்டு, புறந்தள்ளி, வெறுத்து ஒதுக்குவது என்பது ஒரு வகை. பொறாமைக்கு பகைவர்களாகி விடுவதற்கு, நெஞ்சத் துணிவும், நேர்மையின் மீது மேலோங்கிய பற்றும் வேகமும் வேண்டும். கொடுமையும் வலிமையும் கீழ்மையும் கேடும் கொண்டது பொறாமை. அதை விட்டு நீங்குவது என்பது, நெஞ்சார்ந்த பண்பாடுகளால் தாம் முடியும் என்பதையே, நான்காவது குறளில், பெரியோரின் பண்பு தீமைக்குப் புறம்பே இருப்பதாகும் என்று வள்ளுவர் விளக்குகிறார். 165. அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது பொருள் விளக்கம் : அழுக்காறு = பொறாமையான மனக் கோட்டம் உடையார்க்கு = உடையவர்க்கு அது சாலும் அது மிகுதியாகிக் கொண்டு போகும். வழுக்கியும் அந்தப் பொறாமை (உணர்வை) அவர் மறந்திருந்தாலும்: