பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


226 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும். பொருள் விளக்கம்: கொடுப்பது = ஒருவர் பிறருக்கு மனமுவந்து அளிப்பதை அழுக்கு = கவலையுடன் அறுப்பான் = ஆட்சேபித்து தடை செய்பவனது சுற்றம் - அவனை நம்பி வாழ்கிற குடும்பம் உண்பதும் உடுப்பதும் = உண்ணவும் உடுக்கவும் இன்றி - எதுவும் கிடைக்காமல் கெடும் = அழிந்து போகும். சொல் விளக்கம்: அழுக்கம் = கவலை; அறுப்பான் = ஆட்சேபித்தல், தடைசெய்தல்; சுற்றம் = குடும்பம் முற்கால உரை: பிறர்க்குக் கொடுப்பதன் கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம் உடுக்கப்படுவதும், உண்ணப்படுவதும் இன்றிக் கெடும். தற்கால உரை: பிறர்க்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவர். உணவு உடையின்றி, சுற்றத்தோடும் அழிவர். புதிய உரை: ஒருவர் பிறர்க்கு அளிப்பதைக் கவலைப்பட்டு, தடுத்து, தடையைச் செய்கிறவரது குடும்பம், உடுப்பதும் உண்பதுமின்றி, தாமே அழிந்து விடும். விளக்கம்: பொறாமை மனத்தில் ஆட்கொண்டபோதே, பொறாமைக்காரன் அழித்து போகிறான் என்பதை முதல் ஐந்து குறளிலேயே விளக்கிய வள்ளுவர், அவரது குடும்பமும் யாரும் அழிப் பாரின்றி, அந்தப் பாவத்தாலே பட்டுப் போகும் என்று நுண்மையாக விளக்குகின்றார். பொறாமை என்பது தீ போல, தீயின் குணமாவது, தான் இருக்கும் இடத்தை முதலில் அழித்து, பிறகு சுற்றுப் புறத்தையெல்லாம் சுட்டுப் பொசுக்கி விடும். அதுபோல, பொறாமைத் தீ உரியவனை முதலில், சுலபமாக எரித்துப் பொசுக்கி விடுகிறது. அத்துடன் அவரைச்சுற்றி வாழ்கிற குடும்பத்தையும், அழித்து விடுகிறது.