பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - o _ * o o * என்று நான் பொருள் கண்டிருக்கிறேன். அறிஞனே பொறாமைப் படுகிறபோது, அவனது அறிவு அழிந்து போக, அவனது வாழ்வு நிலை செம்மையிழந்து, சீரிழந்து, சருங்கிப்போக, அழிவு நிலைக்கு ஆளாக நேரிடுகிறது. அறிஞனையே அழுக்காறு அழிக்கிற ஆற்றல் கொண்டிருக்கும் போது, சாதாரண மனிதர்களை அது சாய்த்தே விடுமல்லவா! பொறாமையானது அறிவை மட்டுமல்ல, அமைதியை மட்டுமல்ல, வாழ்வின் அனைத்து மகிழ்ச்சிகளையும் சுருங்கச் செய்து, கொய்து, அழித்து விடும் என்று 7 வது குறளில் கூறுகிறார். 168.அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். பொருள் விளக்கம்: அழுக்காறு என = பொறாமை எனப்படும் ஒரு பாவி = (தீய சக்தியானது) தீவினையானது திருச் செற்று = சிறப்பு மிகு அழகையெல்லாம் அழித்து தீயுழி = நெடுங்காலம் அந்தக் கொடுமையை அனுபவிக்க உய்த்துவிடும் = அமிழ்த்தி விடும் சொல் விளக்கம்: பாவி = தீவினையானது; திரு - அழகு, சிறப்பு, தெய்வத் தன்மை, செல்வம்; செற்று = அழித்து; தீ - கொடுமை ஊழி - நெடுங்காலம், உறைகாலம்; உய்த்தல்; அனுபவித்தல், அமிழ்த்தல். முற்கால உரை: பொறாமை என்னும் பாவி, தன்னைச் சேர்ந்தவன் செல்வத்தைக் கெடுத்து, அவனை நரகத்தில் தள்ளுவான். தற்கால உரை: பொறாமை ஒருவனுடைய செல்வத்தையும் அழித்து அவனையும் தீயவழியில் கொண்டு போய் விடும். புதிய உரை: பொறாமை எனப்படும் தீவினையானது, அதைச் செய்பவனது அழகையெல்லாம் அழித்து, அவன் வாழும் காலம் வரை அனுபவிக்க வைத்து வருத்திவிடும்.