பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/233

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


232 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - o - * * I8. வெஃகாமை (விருப்பமற்ற வெறுப்புடைமை என்றே கூறலாம்) மனதில் உள்ள மாசுக்களில், மலங்களில் அழுக்காறு என்பது மோசமான உணர்வாகும். அழுக் காற்றின் தீமைகளை அளவிடற்கரிய துன்பங்கள் தரும் தீர்வுகளை எல்லாம் விளக்கிய வள்ளுவர், அதற்கு அடுத்த அத்தியாயமாக வெஃகாமை என்று வைத்திருக்கிறார். வெஃகு என்றால் அவாவு என்று பொருள். வெஃகல் என்றால் அதிக ஆசை என்பர். அதீத ஆசை என்றும் சொல்வர். அதீதம் என்றால் எட்டாதது, எல்லை கடந்தது என்று அர்த்தம். அதை அவா என்றும் கூறுவர். அவா என்பதற்கு ஆசைப் பெருக்கம் என்று கூறினாலும், ஆங்கிலத்தில் அதை Lust என்று பொருள் கொள்கின்றனர். Lust என்பதற்கு இச்சை, இழி காமம், அடங்கா சிற்றின்ப அவா, தகா சிற்றின்ப வேட்கை என்று விரித்துரைக்கின்றனர். இங்கே வெஃகாமை என்னும் சொல்லுக்கு எல்லா உரையாசிரியர்களுமே பிறர் பொருளை வெளவக் கருதாமை என்றே உரை எழுதியிருக்கின்றனர். வெளவுதல் என்றால் பிறர் பொருளைத் திட்டமிட்டுப்பறி, கையாடு, சூறையாடு என்பதாகும். ஆனால் வெஃகாமை என்ற சொல்லுக்கு வெறுப்பு விருப்பின்மை அருவருப்புறு என்றெல்லாம் அர்த்தங்கள் இருக்கின்றன. பிறர் பொருளை முதலில் நினைத்து, அதில் மனத்தைப் பதித்து, ஆசையை வளர்த்துவிட்டு பிறகு கவர நினைக்காமை என்று கூறுவதை விட பிறர் பொருளின் மேல் வெறுப்பு கொள்ளுதல் விருப்பின்மை என்று சொல்கிறபோது, அப்படிச் செய்கிறவர் மேல் முதலில் மரியாதை ஏற்படுகிறது. அழுக்காறாமையை அகற்றி விடுகிற மனது. இயல்பாகவே பிறரது உடமை எதுவாக இருந்தாலும் வெறுத்து ஒதுக்குகிற விருப்பமின்மையை ஏற்படுத்திக் கொள்ளும் என்பதால் வெறுப்பு என்றே நாம் சொல்லி விடலாம். பொருள், புலம், சிற்றின்பம், வெறி என்று வள்ளுவர் பெய் திருக்கும் சொற்களால் விருப்பமின்மையுடன் வாழ்கிற மனதைக் கொள்ள வேண்டும் என்பதற்காக அழுக்காறுக்குப் பின் வைக்கப்பட்டிருக்கிறது.