பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 233 171. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றி குற்றமும் ஆங்கே தரும். பொருள் விளக்கம்: நடுவுஇன்றி = ஒழுக்கமின்றி மனக்கோட்டத்துடன் நன்பொருள் = பிறருக்கு நன்மை தரும் பொருளை வெஃகின் = அதிக ஆசைப்பட்டு பறிக்க நினைத்தால் குடிபொன்றி = உடல் அழிந்து ஆங்கே குற்றமும் = அங்கே ஊனத்தையும் (உடல் குறையையும்) தரும் = உண்டாக்கி விடும். சொல் விளக்கம்: நடுவு = செம்மை, ஒழுக்கம், மனக்கோட்டமின்மை குடி = உடல், குடும்பம், பொன்றி = அழிதல், கெடுதல் தரும் = உண்டாக்கும், கொண்டுவரும். முற்கால உரை: பிறர்க் குரிய அவரது நன்பொருளை வெஃகுமாயின், அது அவன் குடியைக் கெடச் செய்து பல குற்றங்களையும் அவனுக்கு அப்பொழுதே கொடுக்கும். தற்கால உரை: நடுவுநிலை இல்லாமல் பிறரது நல்வழிப் பொருளை ஒருவன் விரும்பினால், அது அவன் கு டியைக் கெடுத்து அழிவையும் அப்போதே தரும். புதிய உரை: மனக் கோட்டத்தால் அதிக ஆசைப்பட்டு பிற பொருளைப் பறிக்க நினைத்தால் உடல் குன்றி ஊனம் உண்டாக, அவன் பல துன்பங்களை அடைய நேரிடும். விளக்கம்: மனத்தளவில் ஒருவன் குற்றம் நினைக்க, அது அவனது உடல் நலத்தைப் பாதித்து விடும். உடல்நலம் குன்றக் குன்ற, அவனது உடலில் குறைகள் மிகுதியாகி, ஊனத்தையும் ஈனத்தையும் உண்டாக்கி விடும். மனம் போல வாழ்வு என்பது, நல்ல சிந்தனை உடலுக்கு நலம், பலம், வளம் தரும். தீய சிந்தனைகள் மனச்சோர்வை உண்டு பண்ணி நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தி, புலன்களின் ஆற்றலை அழித்து, பல குறைகளைக் கொண்டு வந்து விடும். ஒழுக்கக் கேட்டினை மனம் உடல் என்று பிரிப்பதால், இரண்டு கேடுகளும்