பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை - 235 இப்படிப்பட்ட இன்னா செயல்களுக்கு ஆளாக்கி ஒருவரை மாற்றி விடுகிற மயக்கம் தரும் போதைக் குணங்களைப் பொருள்கள் உண்டாக்கி விடுவதால், அதை படுபயன் என்றார். அதைச் செய்பவரைப் பழிபடுவ என்றார். படுவி என்றால் இழிமகள். படுவ என்றால் இழிமகன். பவர் என்றால் பாவி. ஆக வாழ்க்கையில் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுகின்ற அவாவினை வெறுப்புற்று ஒதுக்குங்கள் என்று வெஃகுதலின் விளைவை 2 வது குறளில் விரிவு படுத்திக் காட்டுகின்றார். 173. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர் பொருள் விளக்கம்: மற்றின்பம் = தொடர்ந்து வருகிற பேரானந்தத்தை வேண்டுபவர் = விரும்புகிறவர் சிற்றின்பம் வெஃகி - காம இன்பத்திற்குப் பெரிதும் வெறிகொண்டு அறனல்ல செய்யாரே = ஒழுக்க செயல்களில் பிறழ்ந்து செயல்பட மாட்டார்கள் சொல் விளக்கம்: சிற்றி = சிறியதான, சிற்றின்பம் = புலன் இன்பம், காம இன்பம், மற்றின்பம் = பேரின்பம், பேரானந்தம் , அறன் = ஒழுக்கம். முற்கால உரை: அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தினைக் காதலிப்பவர், பிறர்பால் வெளவிய பொருளால் பெறுகிற நிலையற்ற இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறனல்லாத செயல்களைச் செய்யார். தற்கால உரை: நிலையான இன்பத்தை விரும்பியிருப்பவர் சிற்றளவாக உண்டாகும் இன்பத்தை விரும்பி அற மல்லாச் செயல்களைச் செய்யமாட்டார். புதிய உரை: கடுந்துன்பங்களைக் கொடுக்கும் காம இன்பத்தை அவாவி கீழானவற்றைச் செய்ய மாட்டார்கள் ஒழுக்கத்துடன் வாழ்கின்றவர்கள்.