பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 2I ஞானத்துடன் கலந்தவர்க்கு எப்போதும் இன்னல்களே இல்லை யாகும். விளக்கம்: வேண்டுதல் என்ற சொல் மிகவும் பொருள் பொதிந்ததாகும். எல்லாம் தனக்கு வேண்டும். எதுவும் வேண்டும் என்று அவாவுகிற குணம் கொண்டவன்தான் மனிதன். சிக்கெனப் பற்றிச் சிந்தையைக் குழப்பி செயல்களில் தடுமாறிச் செய்து சீர்குலைக்கின்ற கொடுமை ஆசைக்கு உண்டு. இந்த ஆசையை அடக்குமின் என்றனர். அறுமின் என்றனர். படுமின் என்றனர் . பெரியோர்கள் எல்லாம். ஆகவேதான் விரும்பி வேண்டுகிற ஆசையையும் வேண்டாதவன் என்றார் வள்ளுவர். ஆசையை அறுத்து, பாசத்தை வெறுத்து மலத்தை விலக்கி மனத்தை ஒரு நிலைப்படுத்தி மேல்நிலையில் வாழ்கிற மாண்புமிகு குருவின் ஞான வாழ்க்கையுடன் கலந்து கொண்டவர்க்கு இடும்பை இல வென்றார். எப்படிப்பட்ட இடும்பை? அந்தச் சொல்லுக்குள் அடங்கிக் கிடக்கும் பொருள் குவியல்களைப் பாருங்கள். மனிதரை வதைக்கின்ற அத்தனைத் துன்பங்களையும் குறித்துக் காட்டுகிற சொல்லாக இடும்பை என்னும் சொல்லைப் பெய்திருக்கிறார் வள்ளுவர். இடும் பை: அச்சம், ஆபத்து, தரித்திரம், தவறு, துன்பம், பொல்லாங்கு, நோய், பயம், வறுமை, இத்தனை இன்னல்களும் இருந்தால் ஒருவர் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும்? அத்தனையையும் அறுத்தெறியும் ஆற்றல், அழித்துவிடும். ஆண்மை, ஆன்ம குருவின் அழியா ஞானத்தில் கிடைக்கிறது. அதனைப் பெற்று ஆனந்த வாழ்வு வாழ்க என்று அறிவுறுத்துகின்றார் வள்ளுவர். நிலைத்த பேரும் நீடு புகழும் கிடைக்கும் என்று மூன்றாவது குறளில் கூறப்பட்டது. இவை அகப்பேறுகள் ஆகும். இந்தக் குறளில் உடல்பெறும் பேற்றினைக் குறித்துக் காட்டி, உடலை உருவழிக்கும் `.. அழிக்கும் ஆற்றலைப் பெறுங்கள் என்றால், அதற்கு ஆசையை அடக்கி, அறுத்து ஆள்கிற ஆற்றலாளன் அடியில் சேர்க என்னும் பயன்படு பாதையைப் பாசமான வழிகளைக் காட்டுகிறார் வள்ளுவர்.