பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 24 | விளக்கம்: பிறர் பொருளை வெளவுதல், பேராசையால் தான். பேராசைக்குக் காரணம் பிரியப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவே. அனுபவிப்பது என்பது உடலுக்குப் பிடித்த உணவு, உல்லாச உடை, மாடமாளிகை. மரியாதைகளும், ஆனால் அத்தனையும் உடலுக்காகவே என்பதுதான் லட்சியம். அவ்வாறு அவர் பெறுகிற உல்லாச வாழ்க்கை, சல்லாப கேளிக்கை நடத்துகிற இல்லறம் இவற்றால் சம்பவிக்கும் கர்ப்பம், குழந்தையின் தோற்றம். அது பரம்பரையைப் பெருக்கிக் கொள்ள ஏற்படுவதாகும். அவ்வாறு உண்டாகின்ற கர்ப்பம் கூட சமுதாயத்தில் மதிக்கப்படாது போகும். மாட்சிமை அழியும். வரலாறு அந்த பரம்பரையைக் கேவலமாய் பேசும். இப்படிப் பெறுகிற வினைப்பயன், பயம் கலந்த யாக்கை. பரிதாபம் மிகுந்த வாழ்க்கை. பரிகாசத்திற்கு ஆளாகும் கீழ்மை. இப்படி வருவதெல்லாம், விளைவதெல்லாம் மரியாதையை மாய்த்து விடும். பரம்பரைப் புகழே பாழாகி விடும் என்று 7 வது குறளில் வெஃதலின் தண்டனையை விரிவாகக் கூறுகிறார் வள்ளுவர். 178. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் பொருள் விளக்கம்: அஃகாமெய் குறைவுபடாத நிறைவான உடலுடன் வாழ்கிற செல்வத்திற்கு = வாழ்க்கைக்கு யாதெனின் - எது காரணமாக அமையும் என்றால் வெஃகாமை = பிறர் பொருளை இச்சிக்காத மெய்யும் பிறன் கைபொருள்- பகைவனாக இருந்தாலும் அவனது ஒழுக்கமும் ஒழுக்கம்-சார்ந்த உடல் காக்கும் வாழ்க்கையை வேண்டும்= விரும்பிப் பின்பற்றி வாழ வேண்டும். சொல் விளக்கம்: செல்வம் - வாழ்க்கை, இன்பம்; அஃகாமெய் = நிறைவான உடல் வெஃகாமெய் இச்சைப்படாத உடம்பு; பிறன் = பகைவன் கை ஒழுக்கம்; பொருள் = உடல் முற்கால உரை: குறையாச் செல்வத்திற்குக் காரணம் பிறன் பொருளை விரும்பாமையாகும்.