பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


242 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்கால உரை: ஒருவன் தான் கொண்டுள்ள செல்வம் குறையாது இருப்பதற்கு வழி யாது என்றால், பிறர் பொருளை விரும்பாது இருத்தலேயாம். புதிய உரை: நிறைவான தேகத்துடனும், இன்பத்துடன் வாழ்கிற வாழ்க்கைக்குக் காரணம் பகைவனாக இருந்தாலும் அவன் வாழ்கிற ஒழுக்க வாழ்க்கையையும் காக்கிற தேகத்தின் முறைகளையும் பின்பற்றி வாழ விரும்புகிறபோதுதான். விளக்கம்: பிறன் பொருளை விரும்பாத ஆண்மைக்கு உடல் வளம் வேண்டும். மன பலம் வேண்டும். இலட்சிய நோக்கு வேண்டும். ஒழுக்கத்தின் வாக்கு வேண்டும். அதனால்தான் வாழ்க்கை என்பதைச் செல்வம் என்றார். அதைக் குறையாத நோயணுகா நிறைவான மெய் என்பதால் அஃகாமை என்றார். அஃகாத உடம்பில் தான் வெஃகாத குணம் வளரும் என்றார். தான் நேசிப்பவர்களைப் பின்பற்றி வாழ்வது எல்லோருக்கும் எளிது. தான் விரும்பாத பிடித்தமில்லாத பிறனாகிய பகைவன் ஒருவன் வாழ்கிற வாழ்க்கை சிறந்ததாக இருந்தால் அந்த வாழ்க்கையையும் பின்பற்றி வாழ்வது நிறைவுக்கு மேலும் நிறைசேர்க்கும் என்கிறார். பகைவனை மன்னித்துவிடு என்பது ஒரு அறிவுரை. பகைவனை நேசி என்பது இன்னொரு அறிவுரை. பகைவனும் பண்பான வாழ்க்கை வாழ்கிறான் என்கிறபோது, அதை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வாழ்வது குறைவிலாத இன்பத்தைச் செல்வத்தைக் கொடுக்கும் என்று புதிய முறையை 8வது குறளில் கூறுகிறார். 179. அறன்.அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந்து ஆங்கே திரு. பொருள். விளக்கம்: அறன் அறிந்து தனது தகுதி நிறைந்த ஒழுக்கத்தினால் வெஃகா = பிறர் உடமைகளை பெற வெறுக்கிற அறிவுடையார் = சிறந்த சான்றோரின் திறன் அறிந்து = பெருமைமிகு வரலாற்றை அறிந்து ஆங்கே திருசேரும் - அவரிடம் மேன்மைகள் எல்லாம் போய்ச்சேரும்