பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 180. இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை என்னும் செருக்கு பொருள் விளக்கம்: எண்ணாது = சிந்திக்காது (எதற்கும்) துணிந்து வெஃகின் = பிறர் பொருளை அவாவி, கவர்ந்தால் இறலீனும் - அது அவரை அழித்து, இறுதிக்கு உள்ளாக்கிவிடும் வேண்டாமை = பிறர் பொருளைக் கண்டு வெறுக்கிற என்னும் செருக்கு = களிப்பு மிக்க ஆண்மையானது விறலீனும் = வீரம் மிக்க வெற்றியைக் கொடுக்கும் சொல் விளக்கம்: இறல் = அழிவு, இறுதி நரம்பு முறிதல், விசை இறுகுதல் விறல் = வலிமை, பெருமை, வீரம், வெற்றி வேண்டாமை = வெறுப்பு: எண்ணாது = துணிந்து யோசிக்காது செருக்கு = ஆண்மை, களிப்பு முற்கால உரை: ஒருவன் பிறன் பொருளை இச்சிப்பதால் அழிவும் இச்சியாமையால் வெற்றியும் வரும். தற்கால உரை: பின் வருவதை எண்ணாமல், பிறர் பொருளை விரும்பினால் அழிவும், அப் பொருளை விரும் பாமை எனும் பெருமிதம், வெற்றியையும் உண்டாக்கும். புதிய உரை: எதற்கும் துணிந்து பிறர் பொருளைக் கவர்ந்தால் எண்ணற்ற நோய்கள் வந்து அழித்து விடும். பிறர் பொருளை விரும்பாமல் வெறுக்கும் ஆண்மையானது பெருமை மிகுந்த வெற்றியை அளித்து விடும். விளக்கம்: பிறர் பொருளை அவாவுகிற அறிவிலி எதற்கும் துணிந்தவன். பின் விளைவுகளைப் பற்றியே யோசிக்காதவன். தீய நினைவுகளால் திடீரென தாக்கப் படுவன நரம்புகளும் தசைகளும்தான்.