பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


O 9 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

    • /

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் . பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு பொருள் விளக்கம்: இறைவன் - உலக ஆசைகளை மனத்திலிருந்து இற்றுப்போக வெற்றி கண்ட குருவானவரின் பொருள் சேர் = உண்மையும் சக்தியும் சேர்க்கின்ற புகழ் புரிந்தார் = அருஞ்செயலின் மேன்மை ஒளியில் ஒன்றிப் போய்; மாட்டு = இணைந்து கொள்கிறபோது o இருள்சேர்= மயக்கத்தையும் கலக்கத்தையும் சேர்க்கிற இருவினையும் = அகவினைகளும், புறவினைகளும் ஆகிய இருபால் வினைகளும். சேரா - வந்து சேர மாட்டா (விலகி ஓடிவிடும்) சொல் விளக்கம்: + இறைவன் = எல்லா ஆசைகளையும் அழித்த குரு பொருள் சேர் புகழ் - அருஞ் செயல், வாகை, மேன்மை, ஒளி மேம்பாடு என்று அர்த்தம். முற்கால உரை: மயக்கத்தையும், கலக்கத்தையும் தருகின்ற இருவினைகளையும் கடந்த இறைவனின் திருவடிகளை விரும்புபவர்களிடத்து, நல் வினை, தீய வினை என்னும் இரு வினைகளும் அடையா. தற்கால உரை: இறைவனின் நல் இயல் புகளைத் த *'s இடத்துக் கொண்டவனின், வாழ்வில், நல் வினைகளும், தீய வினைகளும் சேரமாட்டா. புதிய உரை: உலக ஆசைகளை வெற்றி கொண்ட குரு ஆனவரின் அறிவுரைகளை ஏற்று, அவற்றைத் தன்னகத்தே இணைத்துக் கொள்கிறபோது மயக்கத்தையும், கலக்கத்தையும் தருகிற இருவினைகளும் அவரிடம் வந்து சேராமல் விலகி ஓடி விடும். விளக்கம்: - இருவினை = அகவினை என்பது மனத்திலே ஏற்படுகின்ற காமம், குரோதம், மாச்சரியம் ஆகிய மும்மலம். புறவினை என்பது ஐம்புலன்களினால் ஏற்படுகிற செயல்கள்.