பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக் குறள் புதிய உரை விளக்கம்: நாவால் தூற்றுவது, செயலால் நடிப்பது, சிரிப்பால் ஏமாற்றுவது, தந்திரத்தால் மாற்றுவது என்பது மனித இனத்திற்குக் கைவந்த கலையாகும். அறியாமல் செய்கிற சிறு பிழைபோல ஆச்சரியப்படும் வகையில் பெரிய பாவங்களைச் செய்வது மனிதர்க்கு மனிதர் மாறுபட்டுத்தான் இருக்கிறது. அதற்கு அடிப்படையானது வஞ்சக மனம் உண்டாக்குகிற வக்ரமமான குணம். வஞ்சகமும் வக்ரமும் சேர்ந்து கொண்டு விளையாட்டாகக் கருதி, பிறர்மேல் பழி தூற்றுகிறபோது, அதனால் பாதிக்கப்படுகிறவர் மரணத்தால் துடிப்பது போன்ற வாழ்நிலை உருவாகிவிடுகிறது. இந்தச் சூழ்நிலையானது அறங்கள் அல்லாத செயல்களைவிட ஆழமாகக் காயப்படுத்தி விடுகின்றன. ம+ரணம்=காலத்தின் காயம். தூற்றலுக்கு ஆளாகிறவர்கள் நெஞ்சம். தீப்புண்ணைவிட, நாப்புண்ணால் நொறுங்கிப் போவதால் அதைக் கொடுமையான கொலை, பாதகச் செயல் என்று 2வது குறளில் புறங் கூறுவதின் பெருந்தீங்கை புலப்படுத்துகிறார். 183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும். பொருள் விளக்கம்: புறங்கூறிப் = பிறரது இரகசியங்களை வெளிப்படுத்தி பொய்த்து - வஞ்சகம் மிகுந்த வக்ரமான மனத்துடன் உயிர் வாழ்தலிற் =அ (மிருகங்களைப் போல) உடல்காத்து சீவிப்பது அறங்கூறும் = ஒழுக்கத்தைக் காக்கின்ற ஆக்கம் = சட்டமானது சாதல் தரும் = செத்து ஒழிவதைத் தருகின்ற தண்டனையாக அமைகின்றது. சொல் விளக்கம்: புறம் = பிறரது இரகசியங்கள்; அறம் = ஒழுக்கம்; ஆக்கம் சட்டம் முற்கால உரை: ஒருவன் பிறனை முன்புகழ்ந்தும் பின் இகழ்ந்தும் பேசி உயிர் வாழ்தலினும் இறத்தலே நலம். தற்கால உரை: புறத்தே பழித்துக் கூறியும், அவன் முன்னே புகழ்ந்து கூறியும் உயிர் வாழ்தலினும் இறத்தல் அறநூல் சொல்லும் நன்மை தரும.