பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/251

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


250 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புதிய உரை: பிறது இரகசியங்களை வெளிப் படப் பேசி, நம்பிக்கை துரோகியாய், மிருகங்களைப் போல் வாழ்பவனுக்கு அறமானது சட்டமாக மாறி அவனுக்கு மரண தண்டனையே தந்து விடும். விளக்கம்: உயிர் வாழ்தல் என்கிறார் வள்ளுவர். எப்படியாகிலும் உயிர் வாழ்வது மிருகங்களைப் போல, விருப்பம் போல சீவித்தல். எதையாவது உண்பது, எந்த நேரமென்றும் பார்க்காமல் எங்கேயும் கிடந்து உறங்கி, கீழ்த்தரமாக வாழும் மிருக வாழ்க்கையைக் குறித்துக் காட்டவே உயிர் வாழ்தல் என்றார். வஞ்சக மனம், அதனால் உண்டாகும் வக்ரமம் நிறைந்த குணம், அதனால் தீயாக சொற்களைப் பேசி, பிறரது வாழ்வைப் பந்தாட முயல்கிற ஒருவனுக்கு அறம் தருமமாக இல்லாமல் சட்டமாக மாறி, அவனது வாழ்க்கையையே அழித்து விடும் என்பதால்தான், அறங்கூறும் ஆக்கம் சாதல் தரும் என்றார். கொடிய செயலுக்கு வரும் தண்டனையும் கொடுமையாகவே அமையும் என்பதைத்தான் 3 வது குறளில் கூறுகின்றார். 184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் பொருள் விளக்கம்: கண் நின்று = எப்பொழுதும் அறிவுள்ளவராக இருந்தாலும் கண் அற - ஒருவரது பெருமையை அழிக்கும் வண்ணம் சொல்லினும் = மறைகளைக் கூறினாலும் முன்னின்று - பேசப்படுபவரது பழைமையை (நட்பை) உணர்ந்து பின்நோக்கா - எதிர்வரும் காலத்தில் அவரைகாக்க முடியாதவாறு சொல் சொல்லற்க - சாபமிடுவதுபோல இழிச் சொற்களைச் சொல்லக்கூடாது. சொல் விளக்கம்: கண் = அறிவு, பெருமை; நின்று = எப்பொழுதும்; சொல் = சாபம் முன் - பழமை, முதல்; நோக்கு = காத்தல் முற்கால உரை: ஒருவரை முன் இகழினும், பின் இகாழதிருக்கக் கடவன்.