பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 251 தற்கால உரை: ஒருவன் கண்முன் நின்று, கண்ணோட்டம் நீங்க, அவனது குறைகளைக் கூறினும், முன் இல்லாமல் பின்னோக்காமைக்கு ஏதுவாகிய சொற்களைச் சொல்லற்க. புதிய உரை: ஒருவரது பெருமை அழிப்பது போல அவர் முந்தைய மறைகளைப் பேசினாலும், அவரைச் சபிப்பது போல, சாபச் சொற்களைப் பேசாமல் இருப்பது நல்லது. விளக்கம்: ஒருவரது குறைகளை, வெளியிட இயலாத மறைகளை, அறிவில்லாமல் பேசுகிறவர் பொல்லாதவர்தான். தான் முன்னே பழகி வந்த பழைமை நாட்களையும் மறந்து, அவர் எதிர்காலத்தில் பெரும் சோதனைகளை, வேதனைகளை அனுபவிப்பது போல, சாபமிடுவது போன்ற தீச்சொற்களைப் பேசக்கூடாது. வஞ்சக நெஞ்சுக்குள்ளே நஞ்சு தான் நிறைந்திருக்கும். வெளியே வரும் சொற்களிலும் தீப்பிழம்புதான் எரிந்து கொண்டிருக்கும். பிறர் பெருமையை தான் சொல்லப் போகும் சொற்கள் எரிக்கும். அழிக்கும். எதிர்காலத்தையே ஒழிக்கும் என்று தெரிந்த பிறகும் தான் பழகியிருந்த அந்த நாட்களையும் மறந்து, சபித்துப் பேசுவது சண்டாள குணமாகும். அப்படிப்பட்ட பேச்சானது புறங்கூறும் புன்மை மதியினும், சபிப்பது போல மற்றவைகளை வெளிப்படுத்துவது பெருங் கொடிய சதியாகும் என்று 4 வது குறளில் புறம் பேசும் பண்பின் பொல்லாங்கை சாடுகிறார் வள்ளுவர். 185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். பொருள் விளக்கம்: அறம் சொல்லும் = ஒழுக்கப் பண்பு பற்றி பேசுகிற நெஞ்சத்தான் = நெஞ்சம் மட்டும் உன்டயவன் அன்மை = பேச்சினாலே விளைகின்ற தீமையும் அல்லாமையும் புறஞ்சொல்லும் அவன் பிறரது மறைகளை பெரிதுபடுத்திப் பேசுகின்றபோதே புன்மையால் = அற்பத்தனமாக அந்த இழிவான தன்மையின் கொடுமையானது காணப்படும். மற்றவர்களால் எளிதாகத் தெரிந்து கொள்ளப்படும்