பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 255 மகிழ் பவர் மற்றொரு வகை. தங்களது நாவன்மையால் புறங்கூறுவதுடன் அவரைப் பிரித்தாளுகிற சூழ்ச்சி செய்பவர் இன்னொரு வகை. ஒருவர் தன் வாழ்க்கையில் தனது முயற்சியால் முன்னேறுவதைப் பொறுக்காதவர் யாராக இருப்பார்கள்? அந்நியர்கள் அல்லர். அவர்களொடு ஒன்றி உறவாடுகிற உற்றார்கள் தான். அவரை மிகவும் இழிவுபடுத்தி கேளிர் பிரிப்பர் என்றார் வள்ளுவர். உற்றார்கள், சொந்தக்காரர்கள் தாம், அவரோடு கண்டதையும் பேசி, சண்டை போட்டுப் பிரித்து விடுவார்கள். பிறர் நன்றாக வாழ்வதைப் பொறுக்காதது மனித சாதி. ஆகவே, நகச் சொல்லி, புகழ்ந்து பேசி, பாராட்டிட முடியாதவரை தேற்றாதவர் என்றார். தேற்றா என்றால், மனத்தை சமாதானப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள். தவர் என்றால் மிகவும் வேண்டிய உறவினர்கள். ஆக, உறவினர்கள்தாம், அந்த உயர்பவரின் உறவை பிரித்துத் தனிமைப்படுத்துவர் என்பதாக கேளிர்ப் பிரிப்பர் என்று ஏழாவது குறளில் குற்றம் பார்க்கும் சுற்றத்தின் குணத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார். 188. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு பொருள் விளக்கம்: துன்னியார் = அடுத்தவர்கள் அல்லது நண்பர்களின் குற்றமும் - பழிபாவங்களையும் ( பலரும் அறிய) துற்றும் - புறங்கூறித்துற்றுகிற மரபினார் = சுற்றத்தார்கள் ஏதிலார் = தங்களது பகைவர்கள் பற்றி என்னைகொல் = எப்படித் தூற்றுவார்கள் மாட்டு - அவர்களை மாள்விக்கிற அளவுக்குச் செய்வார்கள். சொல் விளக்கம்: துன்னியார் = நண்பர், அடுத்தவர்; மரபினார் = சுற்றத்தார் ஏதிலார் = பகைவர், அன்னியர்; மாட்டுதல் மாள்வித்தல் முற்கால உரை: தமது உறவினர் குற்றத்தையும் தூற்றுவோர், அயலார் குற்றத்தை எப்படித் தூற்றுவார்கள்?