பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/257

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


256 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்கால உரை: நெருங்கிய நண்பர்கள் பற்றியே தூற்றித் திரியும் இயல்பினை உடையவர்கள். சிறிது கூடத் தொடர்பில்லாத பிறரைப் பற்றி மிகமிக இழிவாகப் புறங்கூறிப் பேச, ஒருபோதும் தயங்க மாட்டார்கள். புதிய உரை: அடுத்தவர்களைப் பற்றி அநியாயமாகப் புறம் பேசுகிற சுற்றத்தார்கள், அவர்களது எதிரிகளைப் பற்றி இகழ்ந்து பேசியே அவர்களை மாள் விக்கும் அளவுக்கு புறம் பேசி இகழ்ந்து விடுவார்கள். விளக்கம்: ஏழாவது குறளில், தமது சொந்தக்காரரின் பெருமையைத் தாங்கிக் கொள்ள முடியாத புறங்கூறிகள், அவர்களைப் பொல்லாதது பேசி பிரித்து விடுவார்கள் என்று கூறினார். எரிகின்ற தீக்கு எல்லாப் பொருளும் ஒன்று தான் என்பது போல, பொறாமை பிடித்து புறங்கூறுவார்க்கெல்லாம் தங்களுக்கு அடுத்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. தங்கள் எதிரிகளாகவே எண்ணிக் கொள்வார்கள். அவர்களுக்கு, எதிரிகளைப் பற்றி அலர் தூற்ற வேண்டும் என்றால், அவர்களுக்கு அதுவே பேரின்பமாகத் தானே இருக்கும்? கெடுப்பவர்களுக்கு அடுத்துள்ள அயலார்களானாலும், எதிர்த்து நிற்கிற பகைவர்கள் ஆனாலும் சரி, அனைவரும் ஒன்றுதான். புறம் பேசும் நாக்குக்கு நீக்கு போக்கு கிடையாது தானே! துற்றும் மரபினோர் என்றார் வள்ளுவர். எங்கேயோயிருந்து வருபவர்கள் அல்லர் புறங்கூறும் மக்கள். அவர்கள் சொந்தக்காரர்கள், சுற்றத்தார்கள் தாம் என்பதை இந்தக் குறளில் சுட்டிக் காட்டுகிறார். ஏதிலார் என்றால் அன்னியர் மட்டுமல்ல. அவர்களுக்கு ஆகாதவர்கள். ஆமாம், பகைவர்கள். பழி தூற்றாமல் விட்டு விடுவார்களா? புறங் கூறுபவர்களின் பொல்லாத குணத்தின் முழுமையை, இந்த எட்டாம் குறளில் சுட்டிக் காட்டுகின்றார் வள்ளுவர்.