பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 257 189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை பொருள் விளக்கம்: புறன் நோக்கி = ஒருவரைக் காணாத இடத்தில் புன்சொல் உரைப்பான் = பழிச்சொல்லால் பழித்துரைப்பவன் பொறை - (வாழ்க்கை) பாறைபோல் ஆகிவிடுகிறான் அறன்நோக்கி = ஒழுக்கமாக பிறரை மதித்துப் பேசுகிற ஆற்றும்கொல் = பண்பாட்டினைக் கொண்டு வாழ்கிறவனுக்கு வையம் = தேர் (சிவிகை) வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. சொல் விளக்கம்: புறன் = காணாதபோது; புன்சொல் = பழித்துப் பேசுதல் பொறை = பூமி, பாறை, மலை, சுமை வையம் = பூமி, தேர், சிவிகை, வாகனம் அறன் = ஒழுக்கமானவன் முற்கால உரை: பிறர் நீங்கின இடம் பார்த்து பழித்துரைப்பானது உடற் பாரத்தை நிலம், இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவதெனக் கருதி பொறுக்கிறது போலும். தற்கால உரை: பிறன் ஒருவன் நேரில் இல்லாததைத் தெரிந்து புறங்கூறுபவனுடைய உடற்சுமையைச் சுமத்தலே தனக்குரிய அறம் என்று தான் இவ்வுலகம் எண்ணி இயங்குகிறது போலும். புதிய உரை: புறம் கூறி பழித்துரைப்போரது வாழ்க்கை எதற்கும் பயன் இல்லாத பாறை போலாகி விடுகிறது. அறம் காத்து வாழ்கிறவன் வாழ்க்கை, தேர்மேல் பவனி வருவது போன்ற பெருமையைத் தருகிறது என்பதுதான் வையத்தின் நிலையாகும். விளக்கம்: அறன் (நெறிகளை) நோக்குகிறவனது வாழ்க்கையையும், புறன் நோக்குகிறவன் வாழ்க்கையையும் வள்ளுவர் வகுத்துப் பிரித்துக' காட்டுகிறார் இந்த ஒன்பதாம் குறளில். புறம் பேசுகிறவன் இதயம் பதமிழந்து, கல்லாகி, பாறையாகி விடுகிறது. பாறையில் எதுவும் விளையாது. பாறை எதற்கும் பயன்படாது. பாறையும் பூமிக்குரிய பொறையும் கொடைத்